பிப்.24 ஜெயலலிதா பிறந்தநாள் முதல்.. சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்.. அதிமுகவில் என்ன நடக்க போகிறதோ!
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்குவதாகவே தெரிகிறது.
Recommended Video

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றுவிட்டு கடந்த 8-ஆம் தேதி அவர் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் அமமுகவினரும் அதிமுகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனால் அவர் 23 மணி நேரம் பயணத்திற்கு பிறகே சென்னை வந்தார். இதையடுத்து திநகரில் உள்ள கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் சசிகலா ஓய்வு எடுத்து வந்தார்.

பாதிப்பு
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. எந்த வித பாதிப்பும் இல்லை. எனினும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். சென்னையில் அவர் எப்போது அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த கட்ட நகர்வுகள்
மேலும் பெங்களூருவில் இருந்து சென்னை வந்த அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என பேட்டி அளித்திருந்தார். இதனால் அவரது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ஆம் தேதி முதல் சசிகலாவின் புதிய பரிணாமத்தை பார்க்கலாம் என தெரிகிறது.

முக்கிய பிரமுகர்கள்
அன்றைய தினம் அவர் தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அன்றைய தினம் முதல் விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

நிர்வாகிகள்
சென்னையில் அவர் எப்போதும் கோயிலுக்கு செல்லலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்களோ அன்றைய தினம் கோயிலுக்கு செல்வார் என தெரிகிறது. அது போல் கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் பத்திரிகை நிருபர்களையும் சந்திப்பார் என தெரிகிறது.

அதிமுகவை வழிநடத்த
சிறைக்கு செல்லும் போது ஜெயலலிதாவின் சமாதியில் 3 முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்தார் சசிகலா. நிச்சயம் சிறையிலிருந்து வந்து அதிமுகவை சிறப்பாக வழிநடத்துவேன், நல்லாட்சி தருவேன் என்பதாக அந்த சத்தியம் இருக்கலாம் என தெரிகிறது. தற்போது அதிமுகவை தனது தலைமையின் கீழ் மீட்க அவர் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இதனால்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தனது ஆட்டத்தை துவங்குகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications