'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை
Recommended Video
சென்னை: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை ஏற்று, ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அப்போலோ மருத்துமனை மருத்துவர்கள் ஆகியோரை விசாரித்து வந்தது.

இந்நிலையில் மருத்துவக்குழு அமைக்காமல், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரிப்பது முறையல்ல என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் விசாரணை ஆணையம் தரப்பில் 90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் மருத்துவக்குழு அமைக்கக்கோருவதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அப்போலோ தரப்பில் , மருத்துவர்கள் ஏற்கனவே உரிய பதில்களை அளித்தவிட்டனர். ஆனால் அடிக்கடி மருத்துவர்களை விசாரணைக்கு அழைக்கிறார்கள். விசாரணைக்கு ஆஜராகவில்லை என மிரட்டுகிறார்கள். விசாரணை ஆணையம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை என முறையிடப்பட்டது. மேலும் விசாரணை கமிஷனில் ஒருவர் கூட மருத்துவர் இல்லை என்றும் வாதிட்டார். இதையேற்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications