Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவம்பர் ஒன்று முதல் வகுப்புகள் இப்படித்தான் செயல்படும்! - ஆன்லைன் வகுப்புகளும் உண்டு

ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை எனவும் பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்-லைன் வழி கல்வியும் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறை

வழிகாட்டு நெறிமுறை

கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் ஏற்பாடு, போதுமான அளவு முகக் கவசங்கள் இருப்பு வைத்தல், நடமாடும் மருத்துவ குழு, ஆரம்ப சுகாதார நிலையம், செவிலியர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் வைத்தல், அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

எந்த கிழமையில் என்ன வகுப்பு

எந்த கிழமையில் என்ன வகுப்பு

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், சுழற்சி முறையில் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும் என்றும், எந்த கிழமைகளில் எந்த வகுப்பினர் வரவைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகம் அல்லது தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.

சத்துணவு வழங்கப்படும்

சத்துணவு வழங்கப்படும்

இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் என்றும், வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended Video

    Illam Thedi Kalvi Thittam எதற்கு? எப்படி? அமைச்சர் Anbil Magesh விளக்கம்
    ஆன்லைன் வகுப்பு நடைபெறும்

    ஆன்லைன் வகுப்பு நடைபெறும்

    மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை, பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம் எனவும், ஆன்-லைன் வழி கல்வியும் வழங்கப்படுமெனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில் மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும் பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் வரலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விடுமுறை எப்போது

    விடுமுறை எப்போது

    வடகிழக்குப் பருவமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்தாலும் நவம்பர் 3 முதல் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் 8ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என பல பள்ளிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நவம்பர் 2முதல் 7 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 8 ந்தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+