கிருஷ்ணகிரி சிறுமிகளுக்கு நீதி கேட்டு போராட சீமானுக்கு நேரம் இல்லையா? விசிக வன்னியரசு தாக்கு!
சென்னை: கிருஷ்ணகிரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி ஆசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு கடந்து செல்கிறார் சீமான், கிருஷ்ணகிரி பெண்பிள்ளைகளுக்கு நியாயம் கேட்டு போராட நேரமில்லையா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5 aaம் தேதி முதல் 9 aaம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததும் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிவராமன் பள்ளியில் படித்த காலத்தில் என்சிசி மாணவராக இருந்தபோது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து என்சிசி அலுவலராக மோசடி செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடாத நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்துள்ளார் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.
வன்னி அரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிறுமிகள் என்றும் பாராமல் வன்கொடுமை செய்துள்ளான் இந்த நாதக ஆசாமி. இதை கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆறுதலாகவோ ஒரு அறிக்கை இல்லை. ஆனால் நாதக பாலியல் ஆசாமியை நீக்கி விட்டு கடந்து போகிறார் சீமான்.
மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தும் சீமானுக்கு தமிழ்நாடு - கிருஷ்ணகிரி பெண்பிள்ளைகளுக்கு நியாயம் கேட்டு போராட நேரமில்லையா? 10க்கும் மேற்பட்ட பிள்ளைகளில் ஒரு குழந்தை கர்ப்பமாகி இருக்கிறார். ராவணன் குடில் இதற்கு தான் பயிற்சி தருகிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications