பழைய கணக்கு போனா என்ன? சூப்பர் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கினார் நாம் தமிழர் சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடங்கிய நிலையில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தமிழக மக்களின் நலனுக்காக கட்சி நடத்துவதாக கூறுகிறார். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறி ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி அடைந்தாலும் துவளாமல் மீண்டும் மீண்டும் போட்டியிட்டு வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறார்.
மக்கள் சார்ந்த பிரச்சினைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருவார். தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
அது போல் அது போல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. மே 17 இயக்க நிர்வாகியான திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் புதிதாக ட்விட்டர் கணக்கை சீமான் தொடங்கினார். செந்தமிழன் சீமான் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications