ராகுல் ஆழ்நிலை தியானத்தில் இருந்தாரா? வைகோவை மிஞ்சிய தலைவர் யாரும் இருக்க முடியாது! சீமான் புகழாரம்
திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து சட்டமன்றத்தில் பேசியிருந்தால் அவரை மிஞ்சிய தலைவர் யாரும் இருந்திருக்க முடியாது என திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வருகை தந்தார். அப்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிடப் போவதில்லை. கடந்த காலத்தில் என் முன்னோர்கள் செய்த தவறு எனக்குப் படிப்பினை.

உதாரணமாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து சட்டமன்றத்தில் பேசியிருந்தால் அவரை மிஞ்சிய தலைவர் யாரும் இருந்திருக்க முடியாது. நாம் தமிழர் கட்சியில் ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதைச் செய்கிறோம்.
தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, "இத்தனை நாட்கள் ஆழ்நிலை தியானத்தில் கோமாவில் இருந்தாரா? நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆண்டது காங்கிரஸ் கட்சி. இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? தேர்தல் வரும் பொழுதுதான் எங்கள் மீது பாசம் வருகிறது இவை அனைத்தும் நாடகங்கள்" என்று பதில் அளித்தார்.
இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாசிசம் வீழட்டும் இந்தியா வாழட்டும் என்று மாநில உரிமைக்காக ஸ்டாலின் முழக்கமிடுகிறார். வாக்களித்துத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழ வைக்காமல் இந்திய மக்களை வாழ வைக்க ஸ்டாலின் கிளம்பிவிட்டார்.
எல்லையைத் தாண்டிச் சென்றால் பேராசைப்பட்டுச் செல்கிறார்கள் என்று சொன்னவர்தான் அவரது அப்பா. நான் ஆட்சியில் அமர்ந்த பின்பு மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப் பார்க்கட்டும்" என்று கூறினார். விஜயதாரணி பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சி இனி இருக்காது. அதனால் பாஜகவிற்குச் செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்குச் சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு மூன்று முறை வாய்ப்பு வழங்கியது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை அந்தக் கட்சியில் சேரும் அன்று ஏதாவது செய்வார்கள். அதன் பின் எந்தச் செய்தியும் வராது" என்று பதிலளித்தார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "வாக்கு இயந்திரத்தை வைத்துத் தேர்தல் நடக்கும் போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பாஜகவினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்குப் பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் எனக் கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள்" என்று கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications