பாஜகவுக்கு தெரிந்தெல்லாம் பாகிஸ்தான், பசுமாடு, சாணி, ஜெய்ஸ்ரீராம்.. இதுல முருகன் வேற.. சீமான் நச்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முருகா"ன்னாலே இந்த சீமான் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.. இந்த பாஜகவுக்கு தெரிந்ததெல்லாம் பக்கத்து நாடு பாகிஸ்தான், பசுமாடு, ஜெய்ஸ்ரீராம் கோஷம்.. இதை வெச்சிதான் வண்டி ஓட்டுவாங்க.. தெரிந்ததெல்லாம் சாதி, மதம்.. சாணி அவ்வளவுதான்." என்று சீமான் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவை சரமாரியாக குற்றஞ்சாட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

"பாஜகவுக்கென்று அரசியல் எதுவும் இல்லை.. மதம் தவிர எதுவும் தெரியாது.. மேத்தா சொன்னதுபோல, யானைக்கும், மனிதனுக்கும் மதம் பிடித்தால், அழிவை தவிர எதுவும் மிஞ்சாது என்பதுபோல, இந்த நாடு முழுக்க முழுக்க மதம் பிடித்து அலைகிறது..

நாடு நாசம் ஆகிடும்

நாடு நாசம் ஆகிடும்

தங்கள் நாட்டைவிட, தாங்கள் சார்ந்துள்ள மதம் பெரிது என்று இவர்கள் கருதுவார்களேயானால், இந்த நாடு நாசம் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.. இவர்கள் அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்ததை போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து செய்யலாம் என்று முயற்சி செய்தார்கள்.. தோத்து போனார்கள்.

பாஜக

பாஜக

நான் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இந்த பிஜேபி இருக்கா இல்லையா? இவ்வளவு காலம் போராடாமல், இத்தனை ஆண்டு காலம் தொடாமல் இப்போ ஏன் வேலை தொடணும்? நான் என் முப்பாட்டன் முருகன் என்றபோது கேவலமாக பேசினாங்க.. இழி செய்தாங்க.. என்ன சீமானை கேலி செய்றீங்கன்னு யாருமே அப்போ கேட்கல.

தைப்பூசம்

தைப்பூசம்

ஆயுத பூஜைக்கு லீவு, வினாயகர் சதுர்த்திக்கு லீவு இருக்கும்போது, எங்கள் தமிழ்கடவுள் முருகனின் தைப்பூசத்துக்கு பொதுவிடுமுறை ஏன் இல்லை? என்று கேட்டபோது எனக்கு ஆதரவா யாருமே வரல.. இப்போ இவர்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. எல்லா இடத்துலயும் பிரச்சனை.. 7.5 சதவீதம் ஒதுக்கீடு பிரச்சனை, 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு பிரச்சனை, இந்த பிரச்சனைகளை எல்லாம் மூடி மறைக்க, வேல் எடுத்துக்கிட்டு ஒரு மாசத்துக்கு நாங்க பயணம் போறோம்னு சொல்லிட்டு இருக்காங்க.

அரோகரா

அரோகரா

மக்களின் பிரச்சனைக்கு எப்பவுமே பாஜக நிற்காது.. மக்களுக்கு பிரச்சனையே பாஜகதான்.. கையில் வேலை எடுத்துக்கிட்டு இவங்க செய்யும் அரசியல் செல்லாது.. எந்த வேலை கையில் எடுக்கிறார்களோ, அந்த வேலை வைத்தே இவங்களை அரசியல் களத்தில் வீழ்த்துவோம்.. நீங்க பார்க்கத்தான் போறீங்க.. நீங்க எவ்வளவுதான் அரோகரா போட்டாலும், வெற்றிவேல் வீரவேல் என்று கத்தினாலும், முருகா-ன்னாலே சீமான் முகம்தான் ஞாபகம் வரும் எம் மக்களுக்கு. நீங்க எழுதி வெச்சுகோங்க.

யாத்திரை

யாத்திரை

நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரை யாத்திரை நடத்தறாங்களாம்.. 1-வரை நடத்தலாமே? எங்க அண்ணன் திருமாவளவன் அதைதானே கேட்கிறார்.. அது ஏன் 6 வரை நடத்துறீங்க? டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கருக்கு உரிய நாள், பாபர் மசூதி நினைவு நாள் இருக்கு.. தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமிய மக்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாதுன்னு தான் அந்த நாளை குறி வெச்சி அடிக்கிறாங்க.

அனுமதிக்கலாமா?

அனுமதிக்கலாமா?

இஸ்லாமிய மக்கள் அன்றைய தினம் துயர நாளை அனுஷ்டிக்க ஒன்றுகூடுகிறார்கள்.. அந்த நாள் வரைக்கும் வேல் பயணத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன? வடமாநிலங்களை போலவே இங்கும் கலவரத்தை தூண்டி, வாக்கை எடுக்க பார்க்கிறது... அரசு இந்த வேல்பயணத்துக்கு 6-ம் தேதி வரை அனுமதிக்க கூடாது.. 1-ம் வரை அனுமதிக்கலாமே? 2ம் தேதி வரை அனுமதிக்கலாமே?

தூண்டுவார்கள்

தூண்டுவார்கள்

கடந்த காலங்களில் நான் வேல் பயணம் போறேன்னு சொன்னபோது, என்னை நகர விட்டீங்களா? கோயிலுக்கு முன்னாடி 100 அடி நடந்து போய்க்கிறேன்னு சொன்னேன்.. அதுக்கு இந்த அரசு அனுமதி தந்ததா? 10 அடி கூட நகர விடலையே.. இவங்களுக்கு மட்டும் பேரணிக்கு அனுமதி தர்றீங்களா? டிசம்பர் 6ம் தேதி எவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கும்னு அரசுக்கு தெரியாதா? சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பாஜகவே கண்டிப்பா தூண்டுவாங்க.

பசி, பட்டினி,

பசி, பட்டினி,

அவங்களுக்கென்று கோட்பாடு, நியதி இல்லை.. தெரிந்ததெல்லாம் சாதி, மதம்.. சாணி அவ்வளவுதான்.. பக்கத்து நாடு பாகிஸ்தான், பசுமாடு, ஜெய்ஸ்ரீராம் கோஷம்.. இதை விட்டால் அவங்களுக்கு பாலிசி கிடையாது.. இதை வெச்சிதான் வண்டி ஓட்டுவாங்க.. பசி, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், வன்கொடுமை, எதை பத்தியும் கவலை இல்லை.

யோகிக்ணும்

யோகிக்ணும்

ஆசிபா கற்பழிப்புக்கு பேசாத வாய்கள், உபியில் தங்கச்சியை கற்பழிச்சி போட்டதுக்கு பேசாத வாய்கள், எதுக்குமே பேசாத இந்த வாய்கள் "பாரத மாதாகி ஜே" என்று மட்டும் முழக்கமிடும்.. எவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது? இதையெல்லாம் கற்றறிந்தவர்கள், இளைய தலைமுறைகள் யோசிக்கணும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+