முதல்ல "தாமரை"யை ஒழிக்கணும்.. "செருப்பு" சின்னம் தந்தாலும் ஓகே.. சீமான் போட்ட போடு.. பார்க்குது பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல்கள் எழுந்தபடியே உள்ளன.. சின்னம் விஷயத்தில் என்னதான் நடக்கிறது?

விவசாய கரும்பு சின்னத்தை மீட்டெடுப்போம் என்று சீமான் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. "நாங்கள் எளிய பிள்ளைகள் போராடி உண்டியல் குலுக்கி, பிச்சை எடுத்து, சுவரொட்டி ஒட்டி சின்னத்தைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கும்போது தூக்கு சின்னத்தை வேறு ஒருவரிடம் கொடுக்கிறார்கள். அண்ணாமலை அப்படியே போட்டியிட்டால் கூட 100 ஓட்டுக்கு மேல் போகமாட்டார். அப்படி இருக்கும்போது சின்னத்தை ஏன் கொடுத்தார்கள்?

Seeman slams Tamil Nadu BJP Annamalai and says about Naam Tamizhar Party symbol freeze

அண்ணாமலை: ஏன் என்றால், என்னை சிதைக்க வேண்டும். என் வாக்கு சதவீதத்தை குறைக்க வேண்டும்.. ஏன் மகாராஷ்டிராவில் சின்னத்தை தரவில்லை? குஜராத்தில் யாருக்கும் தரவில்லையே? அரை கிலோ மீட்டரில் கர்நாடகாவுக்கு ஏன் தந்தீங்க? அங்கே கட்சியே இல்லை? ஏன் தந்தீங்க? இன்னும் தேர்தலே அறிவிக்காமல், அதுக்குள்ள ஏன் சின்னத்தை ஒதுக்குறீங்க?

வரி கட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. நாங்கள் 3 தேர்தலிலும் வரி கணக்குத் தாக்கல் செய்துள்ளோம். விவசாயி சின்னம் தரப்பட்டுள்ள கட்சிக்காரர், வரி கணக்கு தாக்கல் செய்துள்ளாரா? பொதுக்குழு கூட்டி இருக்கிறாரா? இது மிகப்பெரிய அநீதி? உடனே சின்னத்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை. இவர் எப்படி கட்சி நடத்துவார் என்று என்னென்னமோ பேசுறீங்க?

தாமரை சின்னம்: முதல்ல இந்த பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேசிய சின்னமாகத் தாமரையை வைத்தால் பாஜகவின் சின்னத்தை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய மலரை மாற்ற வேண்டும்" என்று ஆதங்கத்தை கொட்டி வருகிறார்.

சீமானின் இந்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம் தந்திருந்தார்.. "சின்னம் கிடைக்க சீமான் முதலில் விண்ணப்பித்தாரா? யார் முதலில் விண்ணப்பிக்கிறார்களோ அவங்களுக்குதானே சின்னம் ஒதுக்கப்படும்? இத்தனை வருடமாக போட்டியிடுபவர், ஏன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை? என்று நீதிமன்றமே கேட்கிறது.

விண்ணப்பம் : சம்பந்தமே இல்லாமல் என் மீது பழியை போடுகிறார். சின்னம் கேட்டு விண்ணப்பிக்காதது என் தவறா? அவர் தவறா? ஒரு சின்னத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியுமா? என்றெல்லாம் அடுக்கியிருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சீமான் சந்தித்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன். கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும், அந்த கட்சியின் தலைவர் கேட்காமலேயே சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.

விவசாயி சின்னம்: கடந்த டிசம்பர் 17 ம் தேதி அவர் மனு தந்துள்ளார். ஆனால், அதற்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி விட்டதை திட்டமிட்ட செயலாகும்.

கடந்த 6 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. கட்சிக்கு 7 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. அதிமுக, திமுகவிற்கு அடுத்து பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான். அப்படி இருக்கும்போது கரும்பு விவசாயி சின்னத்தை, நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்க வேண்டும். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம்.. பரிந்துரைப்பதாக சொல்லி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்: சின்னம் தொடர்பான வழக்கு நாளை டெல்லி கோர்ட்டில் வருகிறது. அதில் நீதி கிடைக்கவில்லை என்றால் அடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.

எந்த சின்னமும் கிடைக்கவில்லை என்றாலும் நான் போட்டியிடுவேன்... துடைப்பம் சின்னத்தை வைத்து டெல்லியில் கெஜ்ரிவால் ஜெயிக்கவில்லையா?. செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன். எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள், சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள்..

தேசிய பறவை: நான் கட்சி ஆரம்பிக்கும்போது முதலில் புலி சின்னத்தை கேட்டேன். அது தேசிய விலங்கு என்றார்கள். மயில் கேட்டதற்கு தேசிய பறவை என்றார்கள்.. அப்பறம் எப்படி தேசிய மலர் தாமரையை, பாஜகவுக்கு எப்படி கொடுத்தீங்கன்னு கேட்டேன். இதுவரைக்கும் அதுக்கு பதில் இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+