அஸ்வின் செய்த காரியம்.. தோனி இருந்திருந்தா இப்படியெல்லாம் பண்ணி இருப்பீர்களா? விளாசும் மூத்த வீரர்!
சென்னை: டெல்லி அணியில் ஆடும் மூத்த வீரர் அஸ்வின் நேற்று பவுலிங் செய்த விதம் பலரையும் கேள்வி எழுப்ப வைத்து உள்ளது. முக்கியமாக அவரின் பவுலிங் ஸ்டைல் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Recommended Video
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் தற்போது அமீரகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. உலகக் கோப்பை டி 20 தொடர் நடக்க உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஆட்டம் அதிகம் கவனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஒவ்வொரு வீரரும் எப்படி ஆடுகிறார் என்று அந்தந்த நாட்டு கிரிக்கெட் போர்டுகள் தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளது.
டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்வாகி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று வந்தவர் திடீரென டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். இதனால் அவரின் ஆட்டம் ஐபிஎல் தொடரில் கவனம் பெற்றுள்ளது.

நேற்று போட்டி
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் அஸ்வினின் பவுலிங் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் டி 20 அணிக்கு தேர்வாகி இருக்கும் வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்காக கடந்த போட்டியில் 3 விக்கெட் எடுத்தார். இதனால் நேற்று அஸ்வின் எப்படி பவுலிங் செய்கிறார், எவ்வளவு விக்கெட் எடுக்கிறார் என்று பலரும் கவனித்தனர். நேற்று அஸ்வினின் பவுலிங்கும் நன்றாகவே இருந்தது.

அஸ்வின் பவுலிங்
ஆனால் அவரால் பெரிதாக விக்கெட் எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 3 ஓவர்களை வீசிய அஸ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அஸ்வின் மொத்தம் 22 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவரின் எக்கனாமி அவ்வளவு மோசமாகவும் இல்லை. அவ்வளவு சிறப்பாகவும் இல்லை. இவரின் பவுலிங் ஆக்சன்தான் நேற்று அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானது. இவர் தனது ஆக்சனை அடிக்கடி மாற்றினார்.

ஆக்சன்
முறையாக ஆப் பவுலிங் செய்யாமல் மாற்றி மாற்றி பவுலிங் செய்தார். பல புதிய சோதனை முயற்சிகளை செய்தார். பொதுவாகவே அஸ்வின் நிறைய சோதனை முயற்சிகளை செய்வது வழக்கம். நேற்றும் அதேபோல் அதிகமாக செய்தார். ஆனால் அவரின் சோதனை முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. அவரால் பெரிதாக விக்கெட் எடுக்க முடியவில்லை. பேட்ஸ்மேன்களுக்கும் அவரின் சோதனை முயற்சிகள் சவாலாக இல்லை.

டி 20
டி 20 உலகக் கோப்பை அணியில் தேர்வாகி இருக்கும் அஸ்வின் இப்படி திடீரென சோதனை முயற்சிகளை செய்து, விக்கெட் எடுக்காமல் திணறுவது விமர்சனங்களை சந்தித்துள்ளது. முன்னாள் வீரரும், மூத்த கிரிக்கெட் விமர்சகருமான சேவாக் அஸ்வினின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், அஸ்வின் நேற்று நிறைய முறை சோதனை முயற்சிகளை செய்தார். அவரிடம் தான் ஆப் ஸ்பின் பவுலிங் செய்தால் அதில் அதிக ரன் செல்லும் என்ற அச்சம் இருக்கிறது. டி 20 போட்டிகளில் சிக்ஸ், பவுண்டரி செல்லும் என்ற அச்சம் இருக்கிறது.

தவறு
இந்த அச்சம் காரணமாக அவர் நிறைய சோதனை முயற்சிகளை செய்கிறார். இது பல சமயங்களில் பலன் அளிக்கவில்லை. இதற்கு முன் தோனியின் கேப்டன்சி கீழ் விளையாடிய போது அஸ்வின் இப்படி செய்தது கிடையாது. தோனி அஸ்வினை இப்படி சோதனை முயற்சிகளை செய்ய அனுமதித்தது கிடையாது. ஆனால் தோனி இல்லாத காரணத்தால் இப்போது அஸ்வின் இப்படி முயற்சிகளை செய்கிறார்.

அஸ்வின் சேவாக்
இதற்கு முன் அஸ்வின் போடும் சாதாரண ஆப் ஸ்பின் பவுலிங்கில் விக்கெட் விழும் வாய்ப்புகள் இருந்தது. ரன் சென்றாலும் எங்காவது விக்கெட் விழும் வாய்ப்பும் இருக்கும். குறைந்தபட்சம் எல்பிடபிள்யூ விழும். ஆனால் போது அவர் செய்யும் சோதனை முயற்சிகள் எதுவும் அவருக்கு பலன் அளிப்பதாக தெரியவில்லை. அவர் நேற்று பெரிதாக ரன் கொடுக்கவில்லை. ஆனாலும் சீனியர் என்ற முறையில் அவர் கொஞ்சம் விக்கெட் எடுக்க வேண்டும், என்று சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications