ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர் பலி.. ஆளுநர் தான் முழு பொறுப்பு.. செல்வப்பெருந்தகை காட்டம்!
சென்னை : ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிக்கும் ஆளுநர்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி அளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில் அதனை திருப்பி அனுப்பினார் ஆளுநர். இதையடுத்து சட்டமன்றத்தில் மீண்டும் மசோதா இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தால் தம்பி பல லட்சம் ரூபாயை இழந்ததால், அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அண்ணனே தம்பியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார். இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து கொன்றுள்ளார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
ஆன்லைன் ரம்மியால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.. தூத்துக்குடியில் 'பகீர்’ சம்பவம்!
தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுநருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்? அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா?
உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications