ஆன்லைன் ரம்மியால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.. தூத்துக்குடியில் ‘பகீர்’ சம்பவம்!
தூத்துக்குடி : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சோக நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மியால் கொலை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக்கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது.
ஆன்லைன் சூதாட்டகளால் பணத்தை பறிகொடுத்து கடனாளியான பலர் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை ஒன்று நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருக்கிறார்.
தனது அண்ணன் முத்துராஜிடம் ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்று, அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். இந்நிலையில் முத்துராஜ் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு தம்பியிடம் கேட்டுள்ளார். அதற்கு தங்களது பூர்வீக வீட்டை விற்று பணம் தரும்படியும், மொத்தமாக திருப்பித் தந்து விடுவதாகவும் தனது அண்ணனிடம் கூறியிருக்கிறார் நல்லதம்பி.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முத்துராஜ், நல்லதம்பியை வண்டியில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கம்பியால் தலையில் தாக்கி, வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து போலீசில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications