திமுக கூட்டணியை விட்டும் விலகும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு துளியும் கிடையாது: செல்வபெருந்தகை
சென்னை: திமுகவுடனான காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஒரு இழுபறியும் இல்லை என விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை திமுக வழங்கியது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, என 9 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கேட்டு வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகள் வரை திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கும் நிலையில், அது தொடர்பான விருப்ப பட்டியலும் காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளன. திமுகவோ 7 சீட்டுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து வருகிறது. அதிகப்பட்சம் 8 சீட்டில் திமுக வந்து நிற்கிறது. இதற்கு மேல் 1 சீட்டுக்கு கூட உறுதியாக வாய்ப்பில்லை என திமுக மிகத் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இதனால் இது குறித்து மல்லிகார்ஜுனே கார்கேவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் செல்வப்பெருந்தகை. இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், திமுகவுடனான காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஒரு இழுபறியும் இல்லை என்றும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது மார்ச் 20ஆம் தேதி தான் தொகுதி பங்கீட்டு உடன்பாடு கையெழுத்தானது என்றும் அதனால் இன்னும் நாட்கள் இருக்கிறது எனவும் கூறினார்.
மேலும், திமுக கூட்டணியை விட்டும் விலகும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு துளியும் கிடையாது என்றும் ராகுல் காந்தி, ஸ்டாலின் இடையேயான நட்பு பரிசுத்தமானது எனவும் கூறிய செல்வப்பெருந்தகை, திமுகவுடன் சிறந்த தோழமைக் கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது என்றும் ஒரு போதும் தாங்கள் திமுகவை விட்டுக்கொடுத்து பேசமாட்டோம் எனவும் செல்வபெருந்தகை கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சில மாதங்களுக்கு முன்னர் தானும், மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் எதேச்சையாக துக்க வீட்டில் சந்தித்த போது அவர் கூறியதைத் தான் ஊடகப் பேட்டிகளில் தெரிவித்தேனே தவிர தங்களுக்கு அது போன்ற விருப்பமில்லை என்றார்.
அதே போல் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது கனவு என்றும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று தான் தாம் கூறியிருப்பதாகவும் தனது பேச்சை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தில் புரிந்துகொண்டால் தாம் எப்படி பொறுப்பு எனவும் வினவியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications