எடப்பாடி இதை விட மரியாதை கொடுத்திருப்பாரோ.. செங்கோட்டையனை பேச விடாத விஜய்.. தவெக தகிடுதத்தோம்
புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் நடந்த பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, கவனம் பெற்றார். அவரது உரை, யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் TVK கொண்டுவரவிருக்கும் மாற்றங்களை மையப்படுத்தியது. ஏராளமான தொண்டர்கள் அவரைக் காணவும், அவரது பேச்சு கேட்கவும் திரண்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசவில்லை.
விஜய்யுடன், கட்சி மூத்த தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் கேரவன் மேடையில் பேசினர். அவர்கள் பொதுமக்களிடம் உரையாற்றி, கட்சித் திட்டங்களை விளக்கினர். விஜய்யின் தலைமைத்துவத்தைப் பாராட்டி, வரவிருக்கும் தேர்தல்களில் TVK-க்கு ஆதரவளிக்க மக்களை வலியுறுத்தினர்.

செங்கோட்டையன் எங்கே?
சமீபத்தில் பெரும் கவன ஈர்ப்புடன் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், இந்தக் கூட்டத்தில் பேச வாய்ப்புப் பெறவில்லை. முன்னர் கோலாகல வரவேற்புடன் கட்சிக்குள் வந்த அவர் பேசுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் மேடையில் தோன்றவில்லை; கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவும் இல்லை. அவர் கேரவன் உள்ளே இருந்தாரா என்பதும் காட்டப்படவில்லை.
செங்கோட்டையனின் இந்த திடீர் மௌனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கட்சிக்குள் ஏதாவது உட்கட்சிப் பிரச்சினை அல்லது தவறான புரிதல் உள்ளதா என ஆதரவாளர்கள் வினவுகின்றனர். சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இணைந்த தலைவர் ஒருவருக்கு இத்தகைய முக்கிய மேடையில் ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும் சிலர் கேட்கின்றனர்.
எடப்பாடி உடன் இணக்கமாக இருந்திருந்தால் அவர் இதை விட பெரிய மாறியதை கொடுத்திருப்பார். அவர் கொண்டாடப்பட்டு இருப்பார். ஆனால் செங்கோட்டையனை தவெகவில் கொண்டாடவில்லை. தவெக உறுப்பினர்கள் தற்போது கட்சித் தரப்பிலிருந்து தெளிவான விளக்கத்திற்காகக் காத்திருக்கின்றனர். இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட்டு, அனைத்துத் தலைவர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என கட்சியினர் நம்புகின்றனர்.
புதுச்சேரி விஜய் பேச்சு
இன்று விஜய் தனது பேச்சில், நெஞ்சில் குடியிருக்கும். தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் ஒன்றுதான். புதுச்சேரி என்றாலே நியாபகத்துக்கு வருவது மணக்குள விநாயகர், வில்லியனூர் மாதா.
மகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் . புதுச்சேரியும் தமிழகமும் ஒன்றுதான். ஒன்றிய அரசுதான் தமிழகம் புதுச்சேரி என பிரித்து பார்க்கிறது. வேறு வேறு ஊரில் வேறு வேறு வீட்டில் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான். உலகின் எந்த மூலையில் எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான்.
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக என்னை புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசு பாரபட்சம் பார்க்காமல் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். தமிழ்நாடு அப்படி இல்லை- இதை பார்த்தாவது திமுக அரசு கற்க வேண்டும்
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை. புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? என்று விஜய் பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications