'திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்..' இரா.இளங்குமரனார் மறைவுக்கு..ஜவாஹிருல்லா இரங்கல்
சென்னை: தமிழ்நாட்டின் மூத்த தமிழ் அறிஞரான இரா. இளங்குமரனார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதுபெரும் தமிழ் அறிஞரான இரா. இளங்குமரனார், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.
சொற்பொழிவாளர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழ் வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகம் கொண்டவர் முனைவர் இரா. இளங்குமரனார், 1927ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர்.

தலைவர்கள் இரங்கல்
500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் இளங்குமரனார், திருவிக விருது, திருக்குறள் செம்மல் விருது, திருச்சி தமிழ் சங்க விருது, பெரியார் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இரா.இளங்குமரனார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சி
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய இரா இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்று தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்தவர்.

திருக்குறள் வழியில்
திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அல்லூர் எனும் காவிரி கரையோரத்தில் உள்ள கிராமத்தில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்து பரப்புரை மேற்கொண்டவர். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரை பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ் வழியில் நடத்தியும் தமிழ்ப் பணியாற்றியவர். தமிழ் மான உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பப் பெற்ற இளங்குமரனார் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சாதனையாளர்.

நூல்கள் நாட்டுடைமை
இவரது பாவாணர் நூலகம் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஒரு அறிவு சுரங்கமாகக் கிடைக்கப்பெற்றது என்றால் அது மிகையல்ல. இரா இளங்குமரனார் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பதிவு செய்கிறேன். அவருடைய அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications