டிரங்க் பெட்டியில் செந்தில் பாலாஜி குற்றப்பத்திரிகை.. 3000 பக்க EDயின் ஆவணம் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தனக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை போன்ற ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி முதல் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் 5 நாட்கள் காவல் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் 3,000 க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றபத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் டிரங்க் பெட்டியில் தாக்கல் செய்யபட்டது.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனை அடுத்து மீண்டும் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்த வழக்கு ஆவணங்களான குற்றப்பத்திரிகை, கைது குறிப்பானை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முழுமையாக தங்களிடம் வழங்க வலியுறுத்தி செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அந்த மனுவில், "அமலாக்கத் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் 120 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் அது குறித்த 2,700 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட விசாரணை, தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்து இருப்பதால், ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்." என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் அமலாக்கத்துறை தரப்பிற்கு மனு குறித்த தகவலை தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்பிற்கும், நகல்களை மனுதாரருக்கு வழங்க அமலாக்கத்துறை தரப்புக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பு, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை என தெரிவித்தது. இந்த மனுவை வலியுறுத்தாததன் காரணமாக செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டு இருக்கிறார்.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications