Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ மட்டும் வெள்ளையா, அழகா இருக்கே? கண்ட கண்ட வீடியோ வேற! அத்துமீறிய ஷார்ஜா மாமனார்.. இன்னொரு ரிதன்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிதன்யா தற்கொலை சம்பவ அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பலரும் மீள முடியாத நிலையில் மற்றொரு சம்பவம் கேரள பெண்ணுக்கு நடந்துள்ளது.. சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்த அந்த பெண், அனைத்து விவரங்களையும் கைப்பட பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.. மாமியார் வீட்டில் ஒன்றரை வயது குழந்தையை விட்டு செல்ல மனமில்லாமல், தற்கொலைக்கு முன்பு அந்த குழந்தையையும் கொன்றுள்ளார். என்ன நடந்தது?

ஷார்ஜாவில் வரதட்சணை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண், தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rithanya sharjah dowry

கேரளாவை சேர்ந்தவர் நிதிஷ் .. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வேலை பார்த்து வருபவர்.. தன்னுடைய தந்தை மற்றும் தங்கை நீத்துவையும் தன்னுடனேயே ஷார்ஜாவில் தங்க வைத்து கொண்டுள்ளார் நிதிஷ்..

விபன்சிகா திருமணம்

இவருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன.. மனைவி பெயர் விபன்சிகா மணியன்... கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விபன்சிகாவுக்கு தற்போது 32 வயதாகிறது..

தந்தையை இழந்த விபின்சிகாவை, அவரது தாய் ஷியாமளா செல்லமாக வளர்த்தார்.. திருமணத்துக்கு பிறகும் தன்னுடைய மகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, அளவுக்கு அதிகமான நகைகள், பணத்தை வரதட்சணையாக தந்து, மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்

திருமணம் முடிந்து சில நாட்களில் விபன்சிகாவையும், ஷார்ஜாவுக்கு நிதிஷ் அழைத்துச் சென்றுவிட்டார்.. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தம்பதியினர் துவக்கினர்.. பிறகு, நாளடைவில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடித்தது..

வெள்ளை, கருப்பு நிறம்

இந்நிலையில், விபன்சிகா திடீரென தன்னுடைய குழந்தையை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதுகுறித்து விபன்சிகாவின் அம்மா ஷியாமளா குந்தாரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.

அதில், தன்னுடைய மகளுக்கு வரதட்சணை கொடுமை இருந்ததாகவும், கணவர் நிதிஷூம், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மகளை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது, விபன்சிகா பார்ப்பதற்கு அழகாக இருப்பாராம்.. ஆனால், நிதிஷ் உள்ளிட்டோர் கருப்பாக இருப்பார்களாம்..

டைவர்ஸ் நோட்டீஸ்

இதனால் விபன்சிகாவை பார்த்தாலே எரிச்சல் வந்துள்ளது.. நாங்கள் எல்லாம் கறுப்பா இருக்கும்போது, நீ மட்டும் எப்படி சிகப்பாய் இருக்கலாம் என்று சொல்லி சொல்லியே விபன்சிகாவை அடித்து காயப்படுத்தினார்களாம்..

தலைமுடியும் விபன்சிகாவுக்கு அழகாக இருக்குமாம்.. எனவே, அவரது தலைமுடியை வெட்டியிருக்கிறார்கள்.. அப்போதும் விபன்சிகா அழகாக இருக்கவும், அவருக்கு மொட்டையே அடித்துவிட்டார்கள்..

இப்படி நாளுக்கு நாள் கொடுமை அனுபவித்த வந்தபோதுதான், கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.. இதை பற்றி நிதிஷிடம் கேட்டதற்கு உடனே டைவர்ஸ் நோட்டீஸ் தந்துவிட்டாராம்.. இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் தன்னுடைய மனுவில், விபன்சிகாவின் அம்மா பதிவு செய்துள்ளார்..

3 பேரையும் விடாதீங்க

இந்த புகாரின்பேரில், நிதிஷ், அவரது அப்பா, தங்கை என 3 பேர் மீதும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 85 (பெண்ணை கணவர் மற்றம் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துதல்), 108( தற்கொலைக்கு தூண்டுதுல்) மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம்ப்பிரிவு 3 ( வரதட்சணை வாங்கியதற்காக அபராதம்) மற்றும் 4( வரதட்சணை கேட்டதற்காக அபராதம் விதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, தன்னுடைய தற்கொலைக்கு காரணம், கணவரும், அவரது குடும்பத்தினரும்தான், விபன்சிகா தன்னுடைய ஃபேஸ்புக்கிலேயே போஸ்ட் போட்டுள்ளார்.. இதைத்தவிர, தற்கொலைக்கு முன்பு, கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறாராம்.. அந்த கடிதத்திலும், கணவரையும், மாமனாரையும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்..


அத்துமீறிய மாமனார்

மாமனார், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதை கணவனிடம் முறையிட்டதற்கு, என்னுடைய அப்பாவுக்கும் சேர்த்துதான் உன்னை திருமணம் செய்துள்ளேன், என்னை போலவே, அவருக்கும் உன்னிடம் அனைத்து உரிமையும் உள்ளது என்று சொன்னாராம். இதையும் கடிதத்தில் விபன்சிகா எழுதியிருக்கிறார்..

அதேபோல, ஆபாச படங்களை பார்த்துவிட்டு, தன்னை பாலியல் ரீதியாகவும் கணவர் கொடுமைப்படுத்தியதாகவும, நாயை போல தன்னை நடத்தியதால்தான், இப்படியொரு தற்கொலை முடிவை எடுத்ததாகவும், எக்காரணம் கொண்டும், கணவர், மாமனார்,, நாத்தனார் 3 பேரையும் விட்டுடாதீங்க என்று விபன்சிகா கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 பேரையும் கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடந்த போலீசார் முடிவு செய்துள்ளனர்...

குழந்தையின் உடல்

இதனிடையே, இறந்த குழந்தையின் உடலை, நிதீஷ் வாங்கி தகனம் செய்ய முயற்சித்தாராம்.. ஆனால், அதற்குள் இதுகுறித்த தகவலறிந்த விபன்சிகாவின் அம்மா, இந்தியத் தூதரகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து குழந்தையின் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தற்போது இறந்த மகளின் சடலத்தை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு, அவரது அம்மா ஷார்ஜா கிளம்பிபோயிருக்கிறார்..

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், தற்கொலைக்கு முன்பு, ஃபேஸ்புக் பதிவு, கைப்பட எழுதிய கடிதம், கடிதத்தில் பதிவான விவரங்கள், பொதுமக்களை கதிகலங்க வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+