மாநாடு ரிலீஸ் பிரச்சினைக்கு சிலம்பரசன்தான் காரணம்.. அடுக்கி தள்ளிய பயில்வான் ரங்கநாதன்
சென்னை: மாநாடு திரைப்பட ரிலீஸ் பிரச்சினையில் சிலம்பரசன் தரப்பு மீது தவறு இருப்பதாக, நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: எல்லா நடிகர்கள் படத்திற்கும் சிக்கல் வருவது இயல்புதான். ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் அல்லது சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி இது போன்ற சிக்கல்கள் வருகின்றன.
படத்தை வெளியிடும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தை நாளை வெளியிடலாம் என்று இருக்கும்போது இன்றைக்கு வெளியிட முடியாத நிலை உருவானது. 27 கோடி ரூபாய் பிரச்சனை இதற்கு காரணம்.

டாக்டர் படம்
இந்த நிலையில் இன்னொரு படத்தின் அட்வான்ஸ் பணமான 27 கோடி ரூபாய் இங்கே கொடுக்கப்பட்டு, டாக்டர் பட பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்டது. அந்த படம் அமோக வெற்றி பெற்றது. இப்போது சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்தி விட்டார். இது வேறு சூழ்நிலையில், மாநாடு திரைப்படத்தின் வெளியீடு நவம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில்.. நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பு இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன் தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சிரமங்களுக்கு வருந்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

அன்பானவன் படத்தால் வந்த வம்பு
மற்ற நடிகர்களுக்கு வரும் பொருளாதார பிரச்சினை வேறு, சிலம்பரசனுக்கு வரும் பிரச்சினை வேறு. இது காலம் காலமாக இருந்து வருகிறது. மைக்கேல் ராயப்பன் தயாரித்த, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியான நாள் முதல் இந்த பிரச்சனை இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை நான் காசி திரையரங்கில் பார்த்தேன். சிலம்பரசனின் ஆரம்ப பாடல் காட்சிக்கு ரசிகர்கள் அவ்வளவு வரவேற்பு தெரிவித்தனர். ஆடி குத்தாட்டம் போட்டனர். ஆனால் பாடலுக்கு பிறகு படம் ஓடிக் கொண்டிருக்கும் போது ரசிகர்கள் அப்படியே அமைதியாகி விட்டனர். சிலம்பரசன் நன்கு நடித்துக்கொண்டிருந்தார் ஆனால் எதற்காக நடிக்கிறார் என்ன காட்சி என்ன கதை என்றுதான் யாருக்கும் புரியவில்லை. இந்த திரைப்படம் வெற்றி பெறாது என்பது எனக்கும் தெரியும் என்று மைக்கேல் ராயப்பன் பின்னர் ஓப்பனாக தெரிவித்தார்.

சூட்டிங் வராத சிலம்பரசன்
திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு சிலம்பரசன் வரவில்லை, நிறைய வீணான செலவினமானது. இதனால் தனக்கு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்று பத்திரிகையாளர்களிடம் மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார். இயக்குனர் சொல்படி சிலம்பரசன் கேட்கவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு நடித்துக் கொண்டிருந்தார் என்பது குற்றச்சாட்டாக இருந்தது. இதன்பிறகு சிலம்பரசனுக்கு பதிலாக டி.ராஜேந்தர் பேசினார். படம், நஷ்டமானது உண்மைதான். இதற்கு ஈடாக இன்னொரு படத்தில் சிலம்பரசன் நடிப்பார் என்ற உறுதியளித்தார். ஆனால் மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு தரப்பு பணம் தராத காரணத்தால் தொடர்ந்து பஞ்சாயத்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

பஞ்சாயத்து
தற்போது சிலம்பரசன் நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிலம்பரசன் கொடுக்க வேண்டிய பணத்தை தருவதாக உறுதியளித்தார் ஆனால் அதை உஷா ராஜேந்தர் ஏற்கவில்லை. கடைசியாக ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஒரு பஞ்சாயத்து இது தொடர்பாக நடந்தது. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தந்து விடுகிறோம் என்று உஷா ராஜேந்தர் தெரிவித்திருந்தார். ஆனால் அதை அப்படியே மறந்துவிட்டார். பத்து பைசா தரவில்லை. மீண்டும் மைக்கேல் ராயப்பன் புலம்ப ஆரம்பித்தார்.
Recommended Video

சிம்பு மீது தவறு
மைக்கேல் ராயப்பன் புகார்களுக்கும் சிலம்பரசன் பதில் சொல்லமாட்டார், பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்ல மாட்டார். சொன்னால் சொன்னபடி செய்ய வேண்டும் அப்போதுதான் நாணயம் இருக்கும். ஆனால் அது இல்லாததுதான் பிரச்சினைக்கு காரணம். இப்போதும் சிலம்பரசனுக்காக பணம் கொடுக்க ஐசரி கணேஷ் தயாராக இருக்கிறார். ஆனால் சிலம்பரசனும் உஷா ராஜேந்தரும் சம்மதிக்கவில்லை. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க சிலம்பரசன் தயாராக இல்லை. சிம்பு மீது குற்றம் இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. மைக்கேல் ராயப்பனுக்கு என்ன வலி இருக்கிறது என்பது சுரேஷ் காமாட்சிக்கு நன்கு தெரியும். மைக்கேல் ராயப்பனிடம் இதுபற்றி நான் பேசும்போது, நான் தயாரிக்கும் படத்தில் கூட சிம்பு நடிக்க வேண்டாம், நான் கைகாட்டும் தயாரிப்பாளர் படத்தில் அவர் நடிக்க வேண்டும், எந்த பிரச்சினையும் இருக்காது என்று எழுதிக் கொடுக்கிறேன் என்று தெரிவித்தார். அதற்கும் சிலம்பரசன் தரப்பு தகுந்த பதில் சொல்லவில்லை. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதனிடையே பல்வேறு இடங்களில் இருந்தும் பணத்தை பெற்று மாநாடு திரைப்படம் இன்று காலை முதல் ரிலீசாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications