நீங்க சென்னையில் இருக்கீங்களா.. முதல்ல இதை பண்ணுங்க.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: மாநகராட்சி சார்பாக நடும் மரங்களை பேணி பாதுகாத்து பசுமையான சென்னையாக மாற்ற சென்னை வாசிகளுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில்தான் மாநகராட்சி சார்பாக நடும் மரங்களை பேணி பாதுகாத்து பசுமையான சென்னையாக மாற்ற சென்னை வாசிகளுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் வரும் நாட்களில் அதிக அளவில் மரங்கள் நட உள்ள நிலையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் என்று பலதரப்பட்ட மக்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மக்களே மரங்களை பராமரிக்க வைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக குழுக்கள் மற்றும் மக்களை தேர்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதில் அரசுக்கு உதவ பெருநகர சென்னை மாநகராட்சியை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அணுகலாம் இது போக சாலையில் குப்பை போட கூடாது. குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். வீட்டில் இருக்கும் குப்பைகளை காலையில் வரும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே போட வேண்டும். வெளியே பொது இடங்களில் வீச கூடாது என்று சென்னை மாநகராட்சி கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக அதிகாரிகளை நியமித்து குப்பை போடுபவர்களையும், விதிகளை மீறுபவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சென்னையில் குப்பை போடுபவர்களுக்கும் கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. . சென்னையில் குப்பை போடுவதற்கு எதிராக தீவிரமாக விதிகளை கடைபிடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதிகளை கண்டிப்புடன் கண்காணித்து வருகிறோம். குப்பைகள், மற்றும் கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலோ, நீர் நிலைகளிலோ வீச கூடாது. வீசினால் குப்பைகளை பொறுத்து அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications