Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR அனைத்துக்கட்சி கூட்டம்.. தலைவர்கள் பேசியது என்ன? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பாக திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் பேசியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன.

இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான செல்வப்பெருந்தகை பேசியதாவது, "SIR என்ன சொல்லுகிறது என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து படித்திருக்கிறோம், அறிந்திருக்கிறோம். முதலமைச்சரும் அவருடைய தொடக்க உரையில் ரொம்ப தெளிவாக, SIR கொண்டு வரும் தீமைகள் என்னென்ன என்பதை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். எப்பொழுதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு எதிராக ஓங்கி ஒலிக்கின்ற குரலாக மன்ற முதலமைச்சர் உடைய குரல் இருக்கும். அந்த அடிப்படையில் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி ஆய்வு அறிந்து, கடந்த வாரம் தோழமைக் கட்சிகளோடு ஒரு கூட்டமும், இப்பொழுது அனைத்து கட்சிகளையும் அழைத்து ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

DMK BJP tamil nadu

காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை

இந்த பிரச்சனையை ஜனநாயக ரீதியில் நாம் விவாதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஏற்படுகின்ற பங்கங்களை எல்லாம் நாம் தூக்கி எறிய வேண்டும் என்ற அடிப்படையில இந்த கூட்டத்தை கூட்டியதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் நன்றிகளையும் முதலமைச்சருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் வந்து உங்களுடைய குடியுரிமை சான்று கொடு என்றால் கேட்டால் கொடுக்க முடியுமா? என்னால் கூட கொடுக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதியை இதை கூறியிருக்கிறார். இவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்களோ அவற்றில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி மகாராஷ்டிராவில் திடீர் என்று 90 லட்சம் வாக்காளர்களை ஐந்து மாத இடைவெளியில் சேர்த்தார்களோ, மகாதேவ்புரத்தில் 5 சட்டமன்ற தொகுதியில் படுதோல்வியடைந்தவர்கள், 6வது சட்டமன்றத்தில் 1,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

இதை ஆய்வு செய்யும் போது, பல உண்மைகள் வெளிவந்தன. அவற்றை பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ரொம்ப தெளிவா சொன்னார். வாக்கு திருட்டை நவீன முறையில் தேர்தல் ஆணையம் பிஜேபியும் செய்கிறது என்பதை விளக்கினார். வாக்காளர் பட்டியலில் சிலரின் தந்தை பெயர் என்ன என்று பார்த்தால் ABCD என போட்டிருக்கிறார்கள். முகவரிக்கு NIL என்று போட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இப்படி இருக்கிறார்கள். இப்படியான அவலங்களை தமிழ்நாடு முழுவதும் பரப்பும் நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக இருக்கும்.

காங்கிரஸ் உறுதியாக இருக்கும்

நியாயமான சுதந்திரமான ஜனநாயக அடிப்படையில் வெற்றி பெற முடியாது என்பதால், குறுக்கு வழியில் எப்படி எல்லாம் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதற்கும் தமிழ்நாட்டினுடைய உரிமையை எல்லாம் தாரை வார்த்து கொடுத்தவர்கள் இப்பொழுது மீண்டும் வாக்கு அதிகாரத்தையும் வாக்குரிமையும் அரசியலமைப்புச் சட்டத்தின் பெற்று கொடுத்த உரிமைகளை அவர்கள் எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆகவே முதலமைச்சரை எடுக்கின்ற இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், "வாக்காளர் மறு சீரமைப்பு திருத்தம் என்கிற முறை இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில்தான் இதை எப்படி எதிர்கொள்வது என்பது சம்பந்தமாக விவாதித்து, நாம் அனைவரும் ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த கூட்டம் என்பது இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் இயக்கமாக மாற்றுக

மக்களுடைய உரிமைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட இருக்கிறது வாக்குரிமை எப்படி பறிக்கப்பட இருக்கிறது என்பது சம்பந்தமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ரொம்ப ரொம்ப அவசியம். ஒன்றிய பிஜேபி அரசுடைய மாநில உரிமைகளுக்கு எதிரானது. மக்கள் உரிமைகளுக்கு எதிரான எல்லா பிரச்சினைகளும் வலுமிக்க எதிர்ப்பு கருத்துக்களை நாம் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறோம். நம்முடைய எதிர்ப்பை வலிமையாக பதிவு செய்து வந்திருக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் ஒரு குறைந்தபட்சம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் என்கிற முறையில் ஏதாவது ஒரு போராட்ட நடவடிக்கை மக்களை ஈடுபடுத்துவது என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், "எஸ்ஐஆர் என்னும் ஆபத்தை எதிர்கொள்வதற்கு முதல்வர் எடுத்துள்ள இந்த அவசர நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இது பாராட்டுகிறது. அவர்கள் உரிய கால அறிவிப்புகளையும் செய்து விட்டார்கள். இதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்பது குறித்து முதல்வர் ஒரு வரைவு தீர்மானமாக முன்மொழிந்திருக்கிறார். அதனை நாம் வரவேற்கிறோம். இது வாக்குரிமையை குறிவைத்து நிகழ்த்தப்படுகிற ஒரு தாக்குதல் அல்ல. குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படுகிற ஒரு தாக்குதல்.

தேர்தல் ஆணையத்தின் நோக்கம்

இந்த அரசியல் புரிதல் நமக்கு தேவை குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைதான் கேட்கிறார்கள். ஆதார் அட்டை வேண்டாம் என்று சொல்வதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் இது குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான அல்ல என்பதுதான். 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அதை பொருத்திப் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். 1987 க்கு முன்பு பிறந்திருந்தால் பிறந்த தேதி முகவரி தந்தை பெயர் உள்ளிட்ட ஆதாரங்களை காட்ட வேண்டும். 87 லிருந்து 2004ல் பிறந்திருந்தால் இந்தியாவில் பிறந்திருந்தால் அதற்குரிய பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் நிரூபிக்கும் ஆவணத்தை அளிக்க வேண்டும்.

குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடு ஆக இவர்கள் மறைமுகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என் ஆர் சி ஐ உருவாக்குவது. அதுதான் முக்கியமான நோக்கம். இந்த தேர்தல் வெற்றியோ அல்லது இந்த வாக்கு உரிமையை பறிப்பது என்பது அவருடைய நோக்கம் இல்லை. அவர்களின் இறுதி இலக்கை அறிவிப்பதற்கு என்.ஆர்.சி தேவைப்படுகிறது. என்.ஆர்.சி யை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்த அரசியல் புரிதலோடுதான் இதை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். அதாவது தேர்தல் ஆணையம் வந்து இந்த வேலையை செய்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மிக மிக முக்கியமான செய்தி இதை நாம் எதிர்கொள்வதற்கு அரசியலாக துணிச்சலா வேண்டி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+