சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லைசென்ஸ் வாங்க முடியலையா.. இனி கவலைப்பட வேண்டாம்.. ஸ்லாட் சிஸ்டம் விரைவில் ரத்து!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள 'ஸ்லாட் சிஸ்டம்' விரைவில் ரத்து செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்களும் மூடப்பட்டன. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகே ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படத் துவங்கின. அதுவும் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட தொடங்கியது.

சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு!சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு!

எத்தனை பேருக்கு உரிமம்

எத்தனை பேருக்கு உரிமம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது. அந்தவகையில் வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்களும் மூடப்பட்டன. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படத் துவங்கின.

ஸ்லாட் சிஸ்டம் ரத்து

ஸ்லாட் சிஸ்டம் ரத்து

இதன் காரணமாக ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல், ஆயிரக் கணக்கானோர் காத்திருக்கும் நிலை உருவானது. பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கையினை ஏற்று, ‘ஸ்லாட் சிஸ்டம்' முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதிகாரி தகவல்

அதிகாரி தகவல்

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மக்கள் அதிகம் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் ‘ஸ்லாட் சிஸ்டம்' முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகங்களிலும் தினசரி 45 பேர் மட்டுமே, அவர்களது பணியை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பிறகு 75 ஆக உயர்த்தினோம்.

விரைவில் ரத்து

விரைவில் ரத்து

தமிழகத்தில் கொரோனா பரவல் இப்போது குறைந்துள்ளதால் பொதுமக்கள், மண்டல அலுவலகங்களில் ‘ஸ்லாட் சிஸ்டம்' முறையை திரும்பப்பெற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று ஆர்டிஓ அலுவலகங்களில் ஸ்லாட் சிஸ்டம் முறை விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும்" என்றார்.

English summary
A transport department official said that the ‘slot system’ in place in the regional transport offices will be canceled soon due to the declining corona distribution in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X