Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்சென்னையில் பெரிய ட்விஸ்ட்! தமிழச்சி VS ஜெயவர்தன் VS தமிழிசை.. வெல்வது யாரு? தந்தி டிவி ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்சென்னை லோக்சபா தொகுதியில் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுகவின் ஜெயவர்தன் மற்றும் பாஜகவின் தமிழச்சி தங்கபாண்டியன் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் வெல்வது யார்? என்பது பற்றி பரபரப்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Lok Sabha election 2024 south chennai Thamizhachi Thangapandian Tamilisai Soundararajan DMK BJP AIADMK

முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி தந்திடிவி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி நிலவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தென்சென்னை தொகுதிக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தென்சென்னை தொகுதியில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்பி ஜெயவர்தனும், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், நாம் தமிழர் சார்பில் தமிழ் செல்வியும் போட்டியிட்டுள்ளனர்.

இதில் தென்சென்னை தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 37 சதவீத ஓட்டுகள் பெற்று வெல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 27 சதவீத ஓட்டுகளை பெற்று 10 சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்படி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 19 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது. வெள்ள நிவாரணபணிகளை மேற்கொள்ளாதது, தொகுதி பக்கம் வராதது என பல குற்றச்சாட்டுகள் தேர்தல் சமயத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் வரும் லோக்சபா தேர்தலில் தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெல்வார் என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+