அடி தூள்! இனி வந்தே பாரத் ரயிலில் ஈசியா டிக்கெட் கிடைக்கும்.. கூடுதலாக 8 பெட்டி.. தயாராகும் ரயில்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 8 பெட்டிகளுடன் கூடுதலாக 8 பெட்டிகளை இணைத்து, விரைவில் 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனினும், இந்த ரயில் குறைவான பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

vande bharat train nellai chennai

தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் சென்னைக்கு காலையில் சென்று இரவில் திரும்பும் விதமாக வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.

சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்று அடைகிறது. இந்த ரயில் சேவை தொடங்கியது முதலே பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த வந்தே பாரத் ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என்று மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இருவேளைக்கான உணவுகள், காபி அல்லது டீ, தண்ணீர் பாட்டில், நியூஸ் பேப்பர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, மற்ற 6 நாட்களும் இயக்கப்படுகிறது. பண்டிகை காலம் மற்றும் முக்கிய நாட்களில் முன்பதிவு டிக்கெட் விரைவாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்துவிடுகிறது.

எனவே, கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், 16 பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே வணிகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. சென்னை - நெல்லை ஏற்கனவே 8 பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலம் மற்றும் முக்கிய நாட்களில் வந்தே பாரத் முன்பதிவு டிக்கெட் விரைவாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்துவிடுகிறது. இந்நிலையில் விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதால் அதிகமானோருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதால் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+