காஞ்சிபுரம்.. வேலூர்.. விழுப்புரம்.. மக்களுக்காக விதிகள் தளர்வு.. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு
Recommended Video
சென்னை: காஞ்சிபுரம், வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து நீண்ட தூரம் பயணித்து சென்னையில் வந்து வேலை செய்வோர் சீசன் டிக்கெட் பெறுவதற்கு வசதிக்காக தெற்கு ரயில்வே கட்டுபாடுகளை தளர்த்தியுள்ளது.
நம் நாட்டில் சென்னை, போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே வேலை வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. ஆனால் மற்ற மாவட்டங்களில் பெரிதாக வேலை வாய்ப்புகள் இருப்பதில்லை. இதனால் மற்ற பகுதி மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி வேலை பார்க்கிறார்கள்.

அதேநேரம் அந்த நகரங்களை சுற்றி கொஞ்சம் தள்ளி இருக்கும் மக்கள் தினமும் ரயில்கள் மூலம் பயணித்து வேலை பார்த்து ஊர் திரும்புகிறார்கள். இதற்கு காரணம் ரயில்வே அளித்து வரும் குறைந்த விலையிலான சீசன் டிக்கெட் தான்.
பொதுவாக ரயில்வே விதிகளின்படி 150 கிலோ மீட்டர் வரை மட்டுமே சீசன் டிக்கெட்டை பயணிகள் பெற முடியும். இந்நிலையல் அண்மையில் நடந்த ரயில்வே வாரிய கூட்டத்தில் 150 கி.மீ முதல் 160 கி.மீ வரை சீசன் டிக்கெட் வழங்குவதற்கு கோட்ட பொதுமேலாளர்கள் முடிவு எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து 160 கிலோமீட்டர் தூரம் வரை சீசன் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், காட்பாடி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் வழித்தடம், எழும்பூரிலிருந்து பார்க், சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் வழித்தடம், எழும்பூரிலிருந்து பார்க், வண்ணாரப்பேட்டை, அரக்கோணம், காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் வழித்தடம் உள்ளிட்ட 3 வழித்தடத்தில் பயணிப்பவர்கள் இனிமேல் சீசன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாலம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்த பகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.












Click it and Unblock the Notifications