"எழுந்து அமர்ந்த இசை".. எஸ்.பி.பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. எஸ்.பி. சரண் சொன்ன குட் நியூஸ்!
பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவர் எழுந்து அமர்ந்துள்ளார் என்று அவரின் மகன் பாடகர் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவர் எழுந்து அமர்ந்துள்ளார் என்று அவரின் மகன் பாடகர் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அப்போதில் இருந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன்பின் கடந்த வாரம் திங்கள் கிழமை கொரோனாவில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.

இன்று எப்படி
இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து அவரின் மகன் பாடகர் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார். அதில், பாடகர் எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கி உள்ளார். முழுமையாக அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. எல்லோரையும் அடையாளம் காண தொடங்கி உள்ளார். பிஸியோ சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கிறது.

நல்ல முன்னேற்றம்
இன்று நல்ல விஷயமாக அவர் எழுந்து அமர்ந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் இப்படி எழுந்து அமர்ந்துள்ளார். எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் அவரால் எழுந்து அமர முடியவில்லை. ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் எழுந்து உட்கார்ந்தார். மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.

மருத்துவர்கள் உதவி
மருத்துவர்கள் உதவியுடன் 15-20 நிமிடங்கள் அவர் உட்கார்ந்து இருந்தார். வரும் நாட்களில் நீண்ட நேரம் அவர் உட்கார வாய்ப்புள்ளது. விரைவில் அவர் முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். தற்போது அவர் உடல் முன்னேற்றம் அடைந்து அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதற்கு முன் எப்படி
ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு பிறகு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் மோசம் அடைந்தது. அதன்பின் அவர் மோசமான உடல்நிலையில் இருந்து மீண்டு வந்தார். கடந்த 25 நாட்களுக்கு முன் இவருக்கு நினைவு திரும்பியது. கடந்த வாரத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் நன்றாக மூச்சு விடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் இவரின் உடல்நிலை வேகமாக முன்னேறி வந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications