பள்ளிக்கரணை வெள்ளத்தால் என் பேரக்குழந்தைக்கு 36 மணி நேரம் பால் கிடைக்கவில்லை.. சபாநாயகர் அப்பாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் என் பேரக்குழந்தைக்கு 36 மணி நேரம் பால் கிடைக்கவில்லை என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிறைந்து கரை உடைந்து வெளியேறிய தண்ணீர், பள்ளிக்கரணை பகுதிகள் முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியது. பள்ளிக்கரணை என்பது முழுமையாக சதுப்பு நிலத்தில் உள்ள பகுதியாகும். சென்னை பெருநகர் மாநகராட்சியின் 14-வது மண்டலமாக உள்ள பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருக்கிறது.

 Assembly Speaker M Appavu said that his grandchildren could not get milk for 36 hours due to the flood in Pallikaranai area.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பேரூராட்சியாக இருந்த பள்ளிக்கரணை கடந்த 2012-ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்தது. சென்னை நகரத்தின் முக்கியமான வெள்ளநீர் வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் இருக்கும் நிலையில், இந்த இடம் சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதியாக மாறியது. பின்னர் சட்டப்பூர்வ குடியிருப்பு பகுதிகளாகவும் மாறியது. பள்ளிக்கரணையில் கடந்த 1965-ஆம் ஆண்டு 5,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரந்து விரிந்து இருந்தது. ஆனால் சதுப்பு நிலக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு , வெறும் 1,500 ஹெக்டேர் சதுப்பு நிலமாக குறுகி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வேளச்சேரி பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அதிகமானதால், பேரழிவை சந்தித்தது. கடந்த 20 வருடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு துறையில் போலிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு நீர்நிலைப் பகுதியை குடியிருப்புப் பகுதியாகப் பதிவு செய்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளால் குடியிருப்பு நிலமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் மொத்த பள்ளக்கரணையும் கடுமையாக சூழ்ந்தது. ஆறு நாட்கள் கடந்தும் மக்கள் இன்னும் பள்ளிக்கரணையில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. பள்ளிக்கரணை வெள்ளம் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் என் பேரக்குழந்தைக்கு 36 மணி நேரம் பால் கிடைக்கவில்லை என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். இதேபோல் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொடுத்து விடுவார்கள்.

நானும் எனது ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறேன். பொத்தாம் பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது. மக்களையும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவிக்கு அழைத்ததில் எந்த தவறும் இல்லை. அரசை வெள்ள தடுப்பு பணிகளில் செய்த செயலை விமர்சனம் செய்தால் அங்கு பணி செய்யும் அதிகாரிகளின் பணிகளை கொச்சைப்படுத்துவதை போல் உள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளதை பார்க்க முடிகிறது.

சென்னை பள்ளிக்கரணையில் மிக் ஜாம் புயலால் வெள்ளம் சூழ்ந்ததால் என் பேரக்குழந்தைக்கு 36 மணி நேரம் பால் கிடைக்கவில்லை. என் மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் 36 மணி நேரத்திற்கு பிறகு படகு மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் இறுதியாக ஆட்டோ ரிக்ஸா மூலம் அங்கிருந்து வெளியே வந்தார்கள். என் மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததால் என்னால் உடனே தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. சட்டசபையில் சபாநாயகராக இருந்தபோதிலும் என்னால் என் மகளை உடனடியாக மீட்கவும் முடியவில்லை.. தற்போதைய நிலையில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். இதற்கு காரணம் சென்னையில் 3 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை 36 மணிநேரத்தில் பெய்துள்ளது. இதுவே காரணம். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" இவ்வாறு அப்பாவு கூறினார்.

சட்டசபையில் சபாநாயகராக இருந்தபோதிலும் என்னால் என் மகளை உடனடியாக மீட்கவும் முடியவில்லை.. சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப சில சென்னை தற்போதைய நிலையில் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். இதற்கு காரணம் சென்னையில் 3 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை 36 மணிநேரத்தில் பெய்துள்ளது. இதுவே காரணம். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" இவ்வாறு அப்பாவு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+