மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே.. அதுவும் நாளைக்கே.. பயணிகளுக்கு ஏகப்பட்ட ஸ்பெஷல் இருக்காம்
சென்னை: கோடை விடுமுறை துவங்கிவிட்டதால், பயணிகளின் வருகையையொட்டி, தெற்கு ரயில்வே ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.. அதுகுறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை துவங்கிவிட்டது.. பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, தொடர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளன.. தொடக்க பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பும் வந்துவிட்டது.
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்புகள் விரைவில் வெளியாக போகிறது.. இந்த கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லுதல், சுற்றுலாவுக்கு செல்லுதல், உறவினர் வீட்டுக்கு செல்லுதல் என்று ஏகப்பட்ட பிளான்களை இப்போதே வகுத்து வருகிறார்கள் பொதுமக்கள்.
நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்க போவதால், இந்த நாட்களுக்காகவே பலரும், 2, 3, மாதங்களுக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்வார்கள்...

நெருக்கடி: பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் காலகட்டம் இது என்பதால் அரசு மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களும் அவர்களுக்கு கூடுதல் சேவையை வழங்க தயார் நிலையிலேயே இருக்கும்.. அந்தவகையில், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கோடைக்கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதுதான்:
சிறப்பு ரயில்கள்: ரயில் எண் 06021 கொண்ட தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கோடைக்கால ரயில். இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். வரும் ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய நாட்களில் இயக்கப்படும். ரயில் எண் 06022 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில். திருநெல்வேலியில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு வந்தடையும். வரும் ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

ரயில் எண் 06012 நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். நாகர்கோவிலில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை அடையும். வரும் ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய நாட்களில் இயக்கப்படும். ரயில் எண் 06011 தாம்பரம் - நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். தாம்பரத்தில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும். வரும் ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
ஸ்பெஷல் ரயில்கள்: ரயில் எண் 06044 திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் நண்பகல் 12.45 மணிக்கு சென்றடையும். வரும் மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இயக்கப்படும். ரயில் எண் 06043 சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். வரும் மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
ரயில் எண் 06031 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில். தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு சென்றடையும். வரும் ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய நாட்களில் இயக்கப்படும். ரயில் எண் 06032 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். வரும் ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

சூப்பர் பாஸ்ட் ரயில்: ரயில் எண் 06039 தாம்பரம் - நாகர்கோவில் சூப்பர் பாஸ் சிறப்பு ரயில். தாம்பரத்தில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு சென்றடையும். வரும் ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படும். ரயில் எண் 06040 நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் ரயில். நாகர்கோவிலில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். வரும் ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications