சொந்த ஊர் போக திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு சர்ப்ரைஸ்.. சென்னை டூ மதுரைக்கு நாளை சிறப்பு ரயில்
சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு நாளை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு திங்கள்கிழமை இந்த ரயில் புறப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். சொந்த ஊர்களில் நடைபெறும் உறவினர்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சி, கோவில் கொடை விழா என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது.

சென்னை மதுரைக்கு சிறப்பு ரயில்
இதனால், கடந்த சில வாரங்களாகவே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்துள்ளது. நான் ஏசி சீட்டர் பேருந்துகளில் கூட சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படுக்கை வசதி, ஏசி வசதி பேருந்து என்றால் கட்டணம் அப்படியே இரு மடங்காக உள்ளது.
ரயில்களிலும் 2 மாதங்களுக்கு முன்பே பலரும் முன்பதிவு செய்துவிட்டதால், கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய நினைப்பவர்களுக்கு சீட் கிடைப்பது இல்லை. தட்கல் டிக்கெட்டும் கண்மூடி முழிப்பதற்குள் காலியாகி விடுகிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிட்ட பயணிகள் எப்படி ஊருக்கு போக போகிறோம் என யோசித்துக்கொண்டே பிளானை தள்ளிப்போடுவதையும் பார்க்க முடிகிறது.
நின்று செல்லும் இடங்கள்
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில்தான் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில்களை அவ்வப்போது தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் நாளை சனிக்கிழமை (மே 10) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மறுநாள் காலை 07.55 மணிக்கு சென்று சேர்கிறது. மறுமார்க்கத்தில் மே 12 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு வந்து சேரும்.
எத்தனை ஏசி பெட்டிகள்
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் கொடை ரோடு வழியாக மதுரை செல்லும். மறுமார்க்கத்திலும் இதே ரூட்டில் சென்னைக்கு வந்து சேரும். திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இரவு 12.25 மணிக்கு வரும் இந்த ரயில் 5 நிமிடங்கள் நிற்கும்.
12.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 1.40 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் 10 நிமிடங்கள் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ரயிலில் இரண்டு ஏசி கோச்கள், 16 ஸ்லீப்பர் கோச்கள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications