மோடி மஸ்தான் என யாரை சொன்னீங்க? சட்டசபையில் நயினார் நாகேந்திரனுக்கு ஸ்டாலின் சொன்ன பதிலால் சிரிப்பலை
சென்னை: "நானும் உங்கள் பேட்டியை பார்த்தேன். 'மோடி மஸ்தான்' போல் கொடுக்கப்பட்டதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அதை நான் பிரதமரை குறிப்பிட்டு கூறியதாகவே எடுத்துக் கொண்டேன்" என சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று சட்டசபையில் பேசும்போது, நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக என நயினார் நாகேந்திரன் விமர்சித்த நிலையில், நீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முன்வருமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 17 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய பாஜக சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 7.51% அதிகரித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய அரசின் தரவுகள் சொல்கிறது; மணிப்பூர் கணக்கையும் சேர்த்து கூறினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று நயினார் நாகேந்திரன் கூறினால், மணிப்பூரையும் அதில் சேர்த்து சொல்ல வேண்டும். இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அதிகமாக உள்ளது என்று ஒன்றிய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரங்களும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் அதிகமாக உள்ளன. இதனை ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு கோடைகால நிதியாக ரூபாய் 2,000 கொடுத்துள்ளீர்களே, 5 ஆண்டுகளில் 5 முறை கோடை காலம் வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே.. அது என்ன ஆனது? அதைச் சொல்லிவிட்டு இதையெல்லாம் கேளுங்கள்" எனக் கூறினார். ஸ்டாலினின் பதிலடியால் திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி ரசித்தனர்.
மேலும், "நானும் உங்கள் பேட்டியை பார்த்தேன். 'மோடி மஸ்தான்' போல் கொடுக்கப்பட்டதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அதை நான் பிரதமரை குறிப்பிட்டு கூறியதாகவே எடுத்துக் கொண்டேன்" என சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்தார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
நயினார் நாகேந்திரன் முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மோடி மஸ்தான் வேலை செய்து மக்களை ஏமாற்ற கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று காலை பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததை கேட்டு எனக்கு தூக்கி வாரி போட்டது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 5,000 ரூபாய் பணம் தேர்தலுக்கான அச்சாரம் தான்." எனக் கூறி இருந்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications