இரு வேறு சமுதாயத்தை எதிராக நிறுத்தி அரசியல் ஆதாயம் தேடமாட்டோம்! இந்தி நாளிதழுக்கு ஸ்டாலின் பளிச்!
சென்னை: இரு வேறு சமுதாயத்தை எதிராக நிறுத்தி அரசியல் ஆதாயம் தேடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தைனிக் ஜாக்ரன் என்ற இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்த பளிச் பதிலை கூறியுள்ளார். அது தொடர்பான கேள்வி -பதில் விவரம் வருமாறு;

கேள்வி: உங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சியினர் உங்கள் தலைவர்களிடம் சனாதனம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறார்கள். இருந்தும் உங்கள் கட்சியினர் அப்படி நடந்துகொள்வதாகத் தெரியவில்லையே?
பதில்: தோழமைக் கட்சியினரின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற இயக்கம் தி.மு.கழகம். அதனால் இது பற்றி உரிய விளக்கமும் தரப்பட்டு, அவர்களின் வேண்டுகோளும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை வைத்து, இந்தியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.
கேள்வி: அண்மைக்காலங்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவத்தை வேறு சொற்களில் விமர்சித்துள்ளனர். 2024 தேர்தலின் மையப்பொருளாக 'முற்பட்ட சாதிகள் எதிர் பிற்படுத்தப்பட்ட சாதிகள்' என்பதை முன்னிறுத்த உங்கள் கூட்டணிக்கட்சியினர் முயல்வதாகக் கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: எந்த ஒரு சமுதாயத்தையும் இன்னொரு சமுதாயத்திற்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை நாங்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. தி.மு.க அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசில் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், இதர பிற்படுத்த வகுப்பினருக்கு ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டினைக் கொண்டு வந்தார். அதன் எதிரொலியாக, வடமாநிலங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் இருந்த பல தலைவர்கள் அவரவர் மாநிலங்களுக்கான அரசியல் இயக்கத்தைத் தொடங்கினர்.
காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும், மாநிலங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சியும் ஜனநாயகத் தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2024 தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளவிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications