நீட் விலக்கு கிடைக்காவிட்டால்.. மாநில அரசு சார்பில் தேர்வு நடத்த ஏகே ராஜன் குழு பரிந்துரை?
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த ஏகே ராஜன் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10ஆம் தேதி நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழுவை அரசு அமைத்தது.
இந்த குழுவிற்கு பல்வேறு தரப்பினர் கருத்துகளை பரிந்துரை செய்து அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் தங்கள் பரிந்துரைகளுடன் 165 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது குழு.

85 ஆயிரத்துக்கு மேல் மனுக்கள்
மொத்தம் 85 ஆயிரம் பேர் கருத்து கூறியதாகவும் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ராஜன் தெரிவித்தார். அந்த அறிக்கையில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநில நுழைவுத் தேர்வு
மாநில அரசின் நுழைவுத் தேர்வு, பிளஸ் 2 மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவ சேர்க்கை நடத்தலாம். மேலும் பரிந்துரையை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றால் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

அரசு பள்ளி மாணவர்கள்
நீட் தேர்வு இல்லை என்றாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் தனி உள்ஒதுக்கீடு தேவை என பரிந்துரை செய்யப்பட்டது. ஏ கே ராஜன் குழு பெற்ற 86,462 மனுக்களில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு வேண்டாம் என பரிந்துரைத்துள்ளனர்.

நீட் எப்போது
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றும் அது வரை மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகுமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications