6 வயது குழந்தை ராகவியை டைல்ஸ் கல்லால் தாக்கி.. மாடியில் இருந்து வீசி கொன்ற கொடூர சித்தி சூர்யகலா
Recommended Video
சென்னை: கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த ஆறு வயது குழந்தை ராகவியை டைல்ஸ் கல்லால் அடித்த சித்தி சூர்யகலா, 3வது மாடியில் இருந்து வீசி கொன்றுவிட்டு, தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். சேலையூர் போலீசாரின் விசாரணையில் அவர் வசமாக சிக்கியுள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், சக்கரபாணி தெரு விரிவு, திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு முதல் திருமணத்தில் ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது கல்யாணம் செய்திருக்கிறார்.

தனியாக விளையாடினாள்
இரண்டாவது மனைவி சூரியகலாவுக்கு ஒரு ஆண் கைக்குழந்தை உள்ளது. இந்நிலைலியல் சிறுமி ராகவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 4 மணி அளவில் ராகவி வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

சிறுமி உயிரிழப்பு
அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து ராகவி கீழே விழுந்துவிட்டதாக கூறி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சூர்யகலாவின் போக்கு
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவனின் முதல் மனைவியின் குழந்தை என்பதால், ராகவி மீது அவரது சித்த சூர்யகலாவுக்கு வெறுப்பும் கோபமும் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் சூரியகலா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ராகவியை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.

படுகாயத்துடன் ராகவி
ஆனால் எதுவும் நடக்காதது போல் வீட்டுக்கு வந்த சூர்யகலா, சிறுமி ராகவியை இரண்டு மணி நேரமாக காணவில்லை என்று கணவனிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றிலும் தேடியிருக்கிறார். உறவினர்களும் தேடியிருக்கிறார்கள். அப்போது சிறுமி ராகவி வீட்டின் பின்புறம் இரத்த வெள்ளத்தில் மயங்கிகிடந்தாள். சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

குதிக்க முடியாது
சேலையூர் போலீசார் விசாரணை நடத்திய போது, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தவிட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் மாடியின் சுவர் உயரத்தை பார்த்த போலீசார், சிறுமியால் மாடியில் இருந்து குதித்து இறந்திருக்க முடியாது என்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து துருவி துருவி நடத்திய விசாரணையில் முண்ணுக்கு பின் முரணாக பேசிய சூர்யகலா கடைசியில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications