ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா கேவியட் மனு!
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு போதுமான மின்சார வசதி வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான எல்லா விதமான தடையும் நீங்கி இருக்கிறது.
இந்த உத்தரவு காரணமாக தூத்துக்குடி மக்கள் கொதிப்படைந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
இதற்காக தற்போது தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் ஸ்டெர்லைட் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் மனுதாக்கல் செய்து இருக்கிறது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஸ்டெர்லைட் ஆலை திறப்பிற்கு இடைக்கால தடை வாங்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications