தூள் கிளப்பும் திமுக.. அடுத்த அதிரடி.. மூவர்ண கொடியில் குல்ஃபியுடன் வந்த ஆஹா ஆவின்..!
ஆவினில் இன்று முதல் குல்பி மூவர்ண கொடி விற்பனைக்கு வந்துள்ளது
சென்னை: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி, நம்முடைய ஆவின் நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டு, தேசபக்தியில் நெகிழ வைத்துள்ளது.
பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சில துறைகளைப் பற்றி அதிகம் பேச மாட்டார்கள்.. ஆனால், இன்று மாநிலத்திற்கு வரும் திமுக அப்படியல்ல.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுதான் இதற்கு முன்னோடி என்று சொல்லாமல் இருக்க முடியாது.. துறை வாரியாக புதிய திட்டங்களை உருவாக்கி, அதற்கேற்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தும் பணியும் துவங்கியது..

சூப்பர் அறிவிப்பு
இதில் பால் வளத்துறையும் இணைந்துள்ளது.. கடந்த அதிமுக ஆட்சியில், பால்பண்ணை ஊழல், முறைகேடு என, ஒவ்வொரு புகாருக்கும் தீர்வு கண்டு வரும் திமுக அரசு, அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம், தமிழக மக்களுக்கு, சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. . அந்தவகையில், ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்ய உள்ளது... 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளதாம்.. அதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பால் பாக்கெட்டுகளில் வெளியான விளம்பரங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது..

ஆஹா ஆவின்
ஆவினில் விரைவில் சத்துமாவை அறிமுகப்படுத்தி மக்கள் கூடும் ஆவின் மையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், அத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், இன்னொரு புதுமையை ஆவின் செய்துள்ளது.. நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்தவிழா நாடெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குல்ஃபி
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, அழைப்பு விடுத்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் குல்ஃபி மூவர்ணக் கொடி வண்ணத்தில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

முத்திரை
கடந்த சில தினங்களுக்கு முன்பு, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது ஆவின் நிறுவனப் பொருட்களின் அட்டை படத்தில் செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் இடம் பெற்றது எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ, அதைவிட கூடுதலாக இந்த மூவர்ண குல்ஃபியை எதிர்நோக்கி உள்ளது பால்வளத்துறை.. தேசிய கொடியின் நிறத்தில் ஆவின் நிறுவனம் இன்று குல்பி விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் தேசியக்கொடியை போன்று குல்ஃபி ஐஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு சிறப்பு நிகழ்வு என்றாலும், அங்கு தன் முத்திரையை விடாமல் பதித்து வருகிறது, ஆவின்..!
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications