எதிர்பார்க்கலையே.. "இந்த" பயண அட்டை இருந்தாலே போதும்.. தமிழக அரசு மாஸ்.. மாற்று திறனாளிகள் நிம்மதி
சென்னை: தமிழக போக்குவரத்து துறையில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது... கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவிதொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

கடற்கரை: சென்னையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சர்க்கரை நாற்காலிகளில் செல்ல ஏதுவாக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தவரிசையில், தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
சிறப்பு பஸ்கள்: இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகள் ஏறி பயணிக்க ஏதுவாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நம்பிக்கை வார்த்தைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி, பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் அதில் உள்ளதாவது:
ஆன்லைன் வசதி : "மாற்றுத் திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டையை இணையதளம் வாயிலாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்கட்டமாக மாநகர பேருந்துகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான வசதியை கடந்த ஆண்டு செப்.7-ம் தேதிசென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அறிவுறுத்தல்: இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பயண அட்டையை இணையதளம் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் பெறும் வரை, கடந்த மாதம் (மார்ச்) 31-ம்தேதி வரை செல்லத்தக்க பயணஅட்டை வைத்திருப்பவர்களை ஜூன் 30-ம் தேதி வரை பயணம்செய்ய அனுமதிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல், இணையதளம் வாயிலாக பெறப்பட்ட பயண அட்டை வைத்திருப்பவர்களையும் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து நடத்துநர்களும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, எவ்வித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications