Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிறம் மாறுகிறது".. மக்களுக்கு 2 வகையான அறிவிப்புகள்.. தமிழக அரசு அதிரடி.. குழப்பம் தீர்ந்தது

தமிழக அரசு பஸ்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசு குறித்து, தீயாய் பரவி வந்த பொய்யான தகவல் ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான உரிய விளக்கத்தையும், சம்பந்தப்பட்ட துறை ரீதியான அமைச்சர் தந்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக உள்ளது.

இத்தனைக்கும் அந்த சமயம் அதிமுக அரசானது, கஜானாவை காலி செய்து வைத்து போனதாக திமுக சொல்லி இருந்தது.. மிகப்பெரிய நிதி நெருக்கடியில்தான் முதல்வராக பொறுப்பேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்.

 கலர் பஸ்கள்

கலர் பஸ்கள்

எனினும் இதில், ஒரே ஒரு சிரமம் காணப்பட்டது.. தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெண்களுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.. சில சமயங்களில் சில அரசு பஸ் கண்டக்டர்கள், பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டுவிடும்.. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பிங்க் கலர் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது... அதற்கான பணியும் ஆரம்பமாகி விட்டது.

 தீயாய் பரவிய தகவல்

தீயாய் பரவிய தகவல்

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு செய்தி ஒன்று கசிந்தது.. அதன்படி, தமிழகத்தின் மிக பெரிய பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்து கழகத்தை, நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற, பஸ் போக்குவரத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவுக்கு, தமிழக அரசு வந்துள்ளதாகவும், முதல் கட்டமாக சென்னையில், 1,000 பஸ்கள் இயக்கத்தை, தனியாரிடம் விட திட்டம் உள்ளதாகவும், அதற்கு பிறகு படிப்படியாக தமிழகம் முழுதும், 25 சதவீத பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.. இது மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

இந்த தகவலையடுத்து, புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.. ஏழை, எளிய தமிழக மக்களின் பயணங்களுக்கு பெரும்பங்காற்றும் அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமமாகாதா? எனவே, அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சிவசங்கர்

சிவசங்கர்

இப்படிப்பட்ட சூழலில்தான் அனைத்து விதமான வதந்திகளுக்கும் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் இந்த திட்டம் தாமதமானது. இப்போது அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது... அதனால், விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

 திட்டவட்டம்

திட்டவட்டம்

8 அல்லது 9 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து விரைவாக புதிய பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.. அதனடிப்படையில் புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது... இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதை நிர்மாணித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். மேலும், தனியார் வசம் இருந்த பஸ்களை அரசுடைமையாக்கி நகர்புறத்தில் மட்டுமே இயங்கி வந்த பஸ்களை கிராமப்புறங்களுக்கும் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.

Recommended Video

    எங்கே இருக்கிறது NEET விலக்கு மசோதா? | DMK | AIADMK | Politics
     கருணாநிதி

    கருணாநிதி

    கருணாநிதி வழியில் செயல்படுகின்ற ஸ்டாலின் ஆட்சியில் அரசு பஸ்களை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை... ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது... தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் உள்ளன. அவற்றில் எவ்வளவு டிரைவர் மற்றும் கண்டக்டர் தேவை என்பதை கணக்கெடுத்து, பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்... ஆக, தனியாருக்கு அரசு பஸ்கள் விற்கப்பட மாட்டாது என்பதுடன், 2 ஆயிரம் புதிய பஸ்களை இயக்குவது, மற்றும், டிரைவர் மற்றும் கண்டக்டர் தேவை என்பதை கணக்கெடுத்து, பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை போன்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+