2 லட்டு.. பறந்து வந்த சூப்பர் உத்தரவு.. மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு அதிரடி..!

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2014-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

 சிகிச்சை

சிகிச்சை

இந்த திட்டம் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு கால அளவிற்கு சில சிறப்பம்சங்களுடன் நீட்டிக்கப்பட்டது.. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான தொகையில் 5 லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 ஓய்வூதியதாரர்கள்

ஓய்வூதியதாரர்கள்

இந்நிலையில், ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 4 வருடங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது: அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

 கணையம், புற்றுநோய்

கணையம், புற்றுநோய்

இந்தத் திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு அதாவது 2026ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இதற்கான தகுந்த பொதுத் துறை நிறுவனமானது ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்படும். 4 வருடங்களில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதியுதவியின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

நீட்டிப்பு

நீட்டிப்பு

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும். ஓய்வூதியதாரர்களை சாா்ந்து இருக்கும் நபர்களும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவர். காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திர தொகையானது ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பெறப்படும்.

 தமிழக அரசு அதிரடி

தமிழக அரசு அதிரடி

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் பரிந்துரைக் குழுவின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சேர்க்கப்படும்.. உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கும் பொருந்தும். இதுகுறித்த இதர வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+