பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு சுசிக்கு அவ்வளவு ஆனந்தம்.. கணவனை இழந்த பெண்களுக்கு தேடி வந்த உதவி
சென்னை: சென்னையில் கணவரை இழந்து வாடகை வாகனம் மூலம் ஆன்லைன் பணி செய்துவரும் பெண்களுக்கு பேட்டரி இருச்சக்கர வாகனம் வழங்கி அசத்தி உள்ளது டெமினோஸ் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம். இது பற்றி பார்ப்போம்.
இன்றைய சூழலில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை ஓரளவு சிக்கல் இல்லாமல் நடத்தி செல்ல முடியும் என்கிற நிலை இருக்கிறது. ஆடம்பரத்தை விரும்பாமல், இருப்பதை கொண்டு வாழ்ந்து, கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகாமல், பணத்தை சேமித்து, தேவைக்கு மட்டும் வேண்டிய பொருட்களை வாங்கி வாழ்பவர்களே இங்கு சக்சஸ் ஆக முடியும் என்கிற நிலை இருக்கிறது.

ஆனால் கணவனை இழந்த பல பெண்கள் கடினமான வேலைகள் செய்து தங்கள் குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்பணித்து வாழ்கிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் கணவனை இழந்த பெண்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நடுவில் தான் வாழ்க்கிறார்கள். அன்றாடம் கூலி வேலை செய்தும், உணவு சமைப்பது, உணவு டெலிவரி செய்வது, பெட்ரோல் பங்கில் வேலை, ஜவுளிக்கடைகளில் வேலை, நகைக்கடைகளில் வேலை போன்ற பல்வேறு அடிப்படை வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பல பெண்கள் சென்னையில் தற்போது உணவு டெலிவரி, பொருட்கள் டெவிவரி, ரேபிடோ பைக் டாக்ஸி போன்ற ஆன்லைன் பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று கணவரை இழந்து வாடகை வாகனம் மூலம் ஆன்லைன் பணி செய்து வரும் பெண்களுக்கு பேட்டரி இருச்சக்கர வாகனம் வழங்கி அசத்தி உள்ளது.
இதுபற்றி பெரும்பாக்கம் எழில்நகர் ஹவுசிங் போர்டில் வசிக்கும் சுசி என்ற பெண் கூறுகையில், "எங்களுக்கு வழங்கப்பட்டு இந்த வண்டி, எங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கொடுத்துள்ளார்கள். பெண்கள் வந்து சுயமாக சம்பாதித்து அவர்களின் சொந்த காலில் நிற்க வேண்டும்... அவர்கள் சம்பாதித்து அவர்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ள முடியும்...
யாருடைய சப்போர்டும் இல்லாமல் தனியாக வாழ வேண்டும் என்பதற்காக டெமினோஸ் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த வாகனத்தை இலவசமாக வழங்கி உள்ளது. நான் ரேபிடோவில் பைக் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு சொந்தமாக பைக் இல்லை.. அதனால் சொந்தமாக வண்டி வாங்கி கொடுத்திருக்காங்க..
இதுக்கு எப்படி தேர்வு செஞ்சாங்க அப்படீன்னா.. வீட்டில் வந்து பார்த்தாங்க.. எங்களுடைய வாழ்வாதாரத்தை பார்த்தாங்க.. நிஜமாகவே கஷ்டப்படுறோமோ.. இல்லையா.. எங்களுக்கு வண்டி இருக்கா அல்லது இல்லையா? எங்களுடைய தேவை என்ன.. எங்களுக்கு இந்த வண்டி நிஜமாகவே தேவைப்படுதா இல்லையா.. நாங்கள் வண்டி ஓட்டுறோமோ இல்லை என்பதை எல்லாம் பார்த்துவிட்டு தான் கொடுத்திருக்காங்க.. கணவரை இழந்து குழந்தைகளை வைத்த கஷ்டப்படுற என்னை போன்ற பெண்களுக்கு கொடுத்திருக்காங்க" இவ்வாறு அந்த பெண் கூறினார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications