அரண்ட திருமாவளவன்.. அண்ணாமலையிடம் நெருங்கி போனதுமே விழுந்த 'அந்த' வார்த்தை.. இது எப்போ? சபாஷ்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், விசிக தலைவர் திருமாவளவனும் திடீரென நேருக்கு நேர் சந்தித்து கொண்ட நிலையில், இருவரும் என்ன பேசினார்கள் தெரியுமா?
சொந்த கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள், இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அரசியல் நாகரீகங்களை அவ்வப்போது இழையோடவிட்டு வருவது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சமீபகாலமாகவே தந்து கொண்டிருக்கின்றன..
ரங்கராஜ் பாண்டே: சமீபத்தில்கூட, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தாயார் காலமாகிவிட்டார். அப்போது, ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதற்காக, ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. அதேபோல, பாஜக ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டேவின் அப்பாவின் மறைவையொட்டி, அவரது வீட்டிற்கும் முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்த நிகழ்வும் பெரிதும் கவனிக்கப்பட்டது.

பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. ரங்கராஜ் பாண்டேவின் கையை இறுக்கமாக பற்றி, தந்தையின் மறைவுக்கு தன்னுடைய ஆறுதலையும் சொல்லியிருந்தார்..
சந்திப்புகள்: அதேபோல, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி, மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதான்.. எனினும், சில சந்திப்புகள் ஆச்சரியத்தையும் கவனத்தையும் குவித்து வருகிறது. அப்படிப்பட்ட சந்திப்புதான் நேற்றைய தினம் நடந்துள்ளது.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் அடைந்தபோது, பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.. அந்தவகையில், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்திருந்தார். பிரதமரின் இரங்கல் கடிதத்தை நேரில் வழங்குவதற்காக தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோர் நேற்று மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியை சந்திக்க சென்றார்கள்..
திருமாவளவன்: அவர்கள் 3 பேருமே காரைவிட்டு இறங்கியபோது, அங்கு ஏற்கனவே லட்சுமி பங்காருவை சந்தித்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியே வந்தார்..
திடீரென அண்ணாமலையை எதிரில் நேரில் பார்த்ததும் திருமாவளவன் திகைத்து போனார்.. பிறகு, இருவருமே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். அப்போது, அண்ணாமலையிடம் திருமாவளவன், "வாங்க... வாங்க... ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்" என்று சிரித்துக்கொண்டே கை நீட்டி வந்தார்.

அண்ணாமலை: இதைப்பார்த்ததுமே அண்ணாமலையும், திருமாவளவனின் கைகளை பிடித்துக் கொண்டு, "ரொம்ப சந்தோஷம் அண்ணா" என்று சொன்னார்.. பிறகு, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்..
பின்னர், பக்கத்திலிருந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோரிடம் கைகுலுக்கி கொண்டார். அப்போது திருமாவளவனிடம் நலம் விசாரித்த பாஜக தலைவர்கள், "உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்கள்.. திருமாவளவன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த விழுப்புரம் எம்பி ரவிக்குமார், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வணக்கம் வைக்க, பதிலுக்கு அண்ணாமலையும் வணக்கம் சொன்னார்.. ஓரிரு நிமிடங்கள் பொதுவான நலம்விசாரிப்புகளில் இந்த சந்திப்பு முடிந்த நிலையில், திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விமர்சனங்கள்: தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருபவர் திருமாவளவன்.. திமுக கூட்டணியில் இருந்தாலும், அதிமுகவுக்கு பாஜக தொடர்பான எச்சரிக்கைகளை தொடர்ந்து தந்து வருபவர் திருமாவளவன்.
அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர்... அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்" என்று வலியுறுத்தி வருபவர் திருமாவளவன்.
கூட்டணி முறிவு: அதுபோலவே, அண்ணாமலையும் விமர்சித்திருக்கிறார்.. "திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை. அதனால் ஸ்டாலின் அவர்களிடம், "கூட்டணியைவிட்டு போய்விடுவேன், கூட்டணியைவிட்டு போய்விடுவேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றெல்லாம் கருத்து கூறியிருக்கிறார்.
ஆனால், அரசியல் என்பது வேறு, அரசியல் நாகரீகம் என்பதை வேறு என்பதைதான் நேற்றைய இரு தலைவர்களின் சந்திப்பு நிகழ்வுகளும் அமைந்துள்ளன.
அரசியல் நாகரீகம்: அதுமட்டுமல்ல, அரசியல் நாகரீகம் என்பது இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கி உள்ளது என்பதும் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் மேலும் நிரூபணமாகிவிடுகிறது.
-
மதுரை மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் முன்.. ஆதாரத்துடன் அண்ணாமலை ஓபன் டாக் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
கோவை ஷாக்! அண்ணாமலை - வானதி மோதலில் அந்த 1 மணி நேரத்தில் நடந்தது என்ன? வெளியே வராத திருப்பம் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications