செல்லத்தை தூக்கிட்டு வாங்க.. சென்னை மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரத்திற்கு வந்தால்.. வாவ் வீடியோ
சென்னை: சென்னை மெரினா கடலில் குளித்த 2 சிறுவர்கள் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய நிலையில், கடற்கரை பாதுகாப்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு கடந்த 4 வாரங்களுக்கு முன்பு மீட்டது பலரது பாராட்டையும் பெற்றது. அப்போது அவர்கள் கையில் மிதவைகள் இருந்தன. அதேநேரம் இதுபோன்ற மக்கள் கூட்டம் கூடும் ஒவ்வொரு கடற்கரைகளிலும் புதிய நவீன சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்.
சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை போன்ற பல்வேறு கடற்கரைகளில் மக்கள் மாலைநேரங்களில் சென்று மகிழ்வது வழக்கம். கடற்கரையில் அமர்வார்கள். சிலர் கடற்கரையில் கால்களை நனைப்பார்கள். ஆனால் சிலர் கடலில் குளிக்கவும் செய்வார்கள். சென்னையை பொறுத்தவரை கடல் ஆபத்தானது என்பதால் ஆபத்தான பகுதி எனக் குறிப்பிட்டு, இங்கே குளிக்கக்கூடாது என காவல்துறையினர் சார்பில் பதாகைகள் கடலோர பகுதியில் வைக்கப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி பலர் கடலில் குளிப்பது சென்னையில் இயல்பாக நடக்கிறது. சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அப்போது போலீசார் எச்சரித்து உள்ளே இறங்கவிடாமல் தடுத்துவிடுவார்கள். ஆனால் மற்ற கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் மக்களை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஏற்படுகிறது. அலை குறைவாக வரும் நாட்களில் இதனால் பிரச்சனை இருப்பது இல்லை..
அலை மிக ஆக்ரோஷமாக வரும் நாட்களில், ஆபத்தை உணராமல் சிலர் குளிப்பது உண்டு.. முதல் அலையில் வெளியில் தள்ளப்படுவர்.. இரண்டாவது அலையில் அதிவேகமாக உள்ளே இழுத்து செல்லப்படுவது நடக்கிறது. ஆளை இழுத்துச் செல்லும் அலைகளை சென்னையில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். பழவேற்காடு பகுதியில் எல்லாம் மிக சர்வ சாதாரணமாக வரும். இதேபோல் மகாபலிபுரத்திலும் மெரினாவிலும் அடிக்கடி வரும். இதுபோன்ற அலைகளில் சிக்கி பல நேரங்களில் உயிரிழப்புகள் நடப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்படித்தான் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி அன்று மெரினா கடலில் 2 சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது, அதனைக் கண்ட கடற்கரை பாதுகாப்புக் குழுவினர், துரிதமாகச் செயல்பட்டு 2 சிறுவர்களையும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். நல்லவேளையாக கடற்கரை பாதுகாப்புக் குழுவினர் உடனடியாக பார்த்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை..
மக்கள் கூட்டம் கூடும் ஒவ்வொரு கடற்கரைகளிலும் கண்டிப்பாக உயர் கண்காணிப்பு காளம் அமைத்து இது போன்ற நவீன சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து! pic.twitter.com/EfWd83mRa7
— ☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist (@im_inba1) August 6, 2024
அதேநேரம் மக்கள் கூட்டம் கூடும் ஒவ்வொரு கடற்கரைகளிலும் கண்டிப்பாக உயர் கண்காணிப்புகளை அமைத்து, அதிநவீன இயந்திரங்களை மீட்பு பணிக்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியா ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கடலில் சிக்கிய ஒருவரை மீட்க சிறிய அளவிலான மிதவை வண்டி ஒன்று தூக்கி கடலில் போடப்படுகிறது. அது மின்னல் வேகத்தில் தண்ணீரில் சிக்கியவர் அருகில் செல்கிறது. அந்த இயந்திரத்தை அவர் பிடித்துக்கொண்டால், உடனே அது வெளியே கொண்டு வந்துவிடுகிறது.. அந்த இயந்திரத்தை கரையில் இருந்தே ஆப்ரேட் செய்து எங்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். மனிதர்களை விட 10 மடங்கு வேகமாக சென்று கடலில் சிக்கியவர்களை இந்த இயந்திரம் மீட்குமாம். கடலில் சிக்கியவர்களை மீட்கும் இயந்திரம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications