மாணவர்களுக்கு மகிழ்ச்சி.. சட்டென வந்த குட்நியூஸ்.. ஸ்டாலினின் சர்ப்ரைஸ்.. தமிழக அரசு பள்ளிகள் ஹேப்பி
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 - 6 வயது குழந்தைகளுக்கான உணவூட்டு செலவு தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசின், பெண்களுக்கான இலவச பஸ் பேருந்து, உயர் கல்வி மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதுபோலவே, குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமை திட்டமும் அபரிமிதமான ஆதரவை பெற்றுள்ளது.. அந்த வரிசையில், தமிழக அரசின் காலை உணவு திட்டமும், மகிழ்ச்சியை தந்து வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கங்கள் என்னென்ன தெரியுமா?
நோக்கம்: எல்லோருக்குமான தொடக்கக் கல்வி என்ற நோக்கில் மாணவர் சேர்க்கையை முழு அளவில் அதிகரித்தல் , பள்ளி இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல், குறைவான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளை தவறாமல் பள்ளிக்குச் செல்ல ஊக்குவித்தல் மற்றும் முறையான கல்வியைப் பெற அவர்களுக்கு உதவுதல், வேலை வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவையாகும்.
இந்நிலையில், 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
அறிக்கை: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின்கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2- 6 வயது குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 2 - 6 வயது குழந்தைகளுக்கு உணவூட்டு செலவினம் ஒரு பயனாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தினசரி காய்கறிகளுக்கான செலவு ரூ.1.33, உப்பு மற்றும் தாளித பொருட்களுக்கான செலவு 46 காசு, எரிபொருளுக்கான செலவு 60 காசு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பருப்பு வகைகள்: காய்கறிக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு 96 காசு, பயன்படுத்தாத நாட்களில் ரூ.1.10 என்று வழங்கப்பட்ட நிலையில், அது தற்போது ரூ.1.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு, தாளிதப் பொருட்கள், பருப்பு பயன்படுத்தும் நாட்களில் 30 காசு, பயன்படுத்தாத நாட்களில் 45 காசு என்று இருந்த நிலையில், தற்போது 46 காசு என்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல, எரிபொருளுக்கு 26 காசு என்று இருந்தது 60 காசு என்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பருப்பு பயன்படுத்தும் நாட்களில் ரூ.1.52, பயன்படுத்தாத நாட்களில் ரூ.1.81 என்று வழங்கப்பட்டு வந்தது தற்போது அனைத்து நாட்களிலும் ரூ.2.39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகள்: இவ்வாறு உணவூட்டு செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,114 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால், தமிழகத்தில் குழந்தைகள் மையங்களில் உள்ள சத்துணவு திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications