சீரக சம்பா மட்டன் பிரியாணி.. குறிஞ்சி இல்லத்தில் ஒரே வாசனை, தடபுடல் விருந்து.. உதயநிதி மெகா அஸ்திரம்
சென்னை : வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கு திமுக இப்போதே தன்னை தயார் செய்து வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் தீவிரம் எடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தவண்ணம் உள்ளன.. எனினும் இந்த தகவலை இதுவரை எந்த தமிழக அமைச்சர்களும் மறுக்கவில்லை... மாறாக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால், அதை வரவேற்பதாகவே பேட்டிகளை தந்து வருகிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகள் மட்டும் இதற்கு எதிர்ப்புகளை பதிவிட்டு வருகிறார்கள்.. உதயநிதியை துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் அதனை ஆதரிப்பீர்களா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி: அதற்கு எடப்பாடி, "அதை எப்படி ஆதரிக்க முடியும்? அவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான்... திமுகவில் எத்தனையோ ஆண்டுகளாக உழைத்தவர்கள் இருக்கிறார்களே? அனுபவமிக்க அமைச்சர்கள் ஏராளமானோர் இருக்கிறார்களே? அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரலாம்.. ஆனால், அப்படி எதுவுமே நடக்காது. ஏன் என்றால் அது குடும்ப கட்சி" என்றார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடமும் இதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால், இந்த தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது" என்று பதிலளித்தார்.
உதயநிதி: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வரப்போகிறதா? இல்லையா? என்பது இதுவரை உறுதியாக தெரிவதற்கு முன்பாகவே, அதுகுறித்த கருத்துக்களும், யூகங்களும் தொடர்ந்து வலம்வந்தபடியே உள்ளன.
ஆனால், வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்த பணிகளில் திமுக இப்போதே கவனம் செலுத்த துவங்கிவிட்டது.. தற்போது கிடைத்துள்ள இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். இதற்காகவே திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.
பிரத்யேக குழு: இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் திமுகவில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய போகிறார்கள்.
இதைத்தொடர்ந்து லோக்சபா தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்து அளித்தார்..
ஸ்பெஷல் விருந்து: வெற்றிக்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், அவர்களுக்கு ஸ்பெஷல் விருந்து தந்து அசத்தினார் உதயநிதி. சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள குறிஞ்சி இல்லத்தில், இந்த விருந்தினை அமைச்சர் உதயநிதி அளித்திருந்தார்.. இதில், திமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கேஎன் நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்..
அதேபோல, ஆஸ்டின், தாயகம் கவி மற்றும் டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுமே இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்... பிறகு எல்லாரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
அறிவுரை: இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடும்போது, "லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி, 2026 தேர்தலிலும் இப்பணி தொடர வேண்டும், கிராமம் கிராமமாக சென்று திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும், அதே சிந்தனையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்" என்றும் உதயநிதி கேட்டுக் கொண்டார்..
இந்த கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம் என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த விருந்தும், விருந்தில் இடம்பெற்ற ஐட்டங்களும்தான் இணையத்தில் வீடியோவாக வெளியாகி, காண்போரை வெகுவாக ஈர்த்து வருகிறது.. இந்த உணவு வகைகளை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்திருக்கிறார்கள்.
மட்டன் பிரியாணி: சீரக சம்பா மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் மீன் வறுவல், மிளகு கொத்துக் கோழி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் தொக்கு, பரோட்டா, முட்டை தோசை, நாட்டுக்கோழி குருமா போன்ற அசைவு உணவுகள் பரிமாறப்பட்டன.. அதேபோல, தயிர் பச்சடி, மாம்பழம் ஸ்வீட் ரோல், முந்திரி பிரட் அல்வா போன்ற ஸ்வீட்களும் விருந்தில் இடம்பெற்றிருந்தன.
-
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications