எடப்பாடியோ, ஸ்டாலினோ.. யார் ஆட்சி என்றாலும் எஸ்வி சேகரை விழுந்து விழுந்து கவனிக்கும் முதல்வர்கள்!
சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதிகார மட்டத்தின் அனுக்ரக சேவை பெற்றவர் என்பதை அண்மைய சம்பவங்கள் நிறுவி வருகின்றன. எஸ்.வி.சேகரின் வீடு உள்ள தெருவுக்கு அவரது தந்தை எஸ்.வெங்கட்ராமன் பெயர் சூட்டப்படும் என உறுதி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முந்தைய ஆட்சியாளர்களிடமும் அனுகூலம் பெற்றவர் எஸ்.வி.சேகர்.
நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய எஸ்.வி.சேகர், “நான் முதல்வரிடம் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் எனது தந்தையாரின் நினைவை போற்றும் வகையில் நான் வசிக்கும் மந்தைவெளியில் உள்ள ஐந்தாவது டிரஸ்ட் கிராஸ் தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்” என வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.வி.சேகரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
அதனை தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னை ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் வந்து சந்தித்து கோரிக்கை வைத்தார் எஸ்.வி.சேகர்.. இல்லை உத்தரவிட்டார். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். முதல்வராக நான் பொறுப்பேற்ற பிறகு இப்படியான நாடக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என சொன்னேன். ஆனால் அவர் கண்டிப்பாக வர வேண்டும் என்று உத்தரவிட்டார். மகிழ்ச்சியுடன் வந்தேன்.
எஸ்.வி.சேகர் எந்த கட்சியில் இருந்தாலும் சரி... இப்போது எந்தக் கட்சி என தெரியவில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர் நம்ம கட்சி. கலைஞரை அழைத்து நாடகம் நடத்திய அவர். இன்று 7,000வது நாடகத்துக்கு கலைஞர் மகனை அழைத்து வந்துள்ளார். பாசம் என்றால், அரசியல் பாசம் அல்ல, அது கலை பாசம். இன்னும் சொல்லப்போனால் அவர் எங்கள் குடும்பம், அரசியல் இல்லை; கலைக் குடும்பம். எஸ்.வி.சேகர் மீது கலைஞருக்கு பாசம், பற்று அதிகம் உண்டு.
புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
எந்த கட்சியில் இருந்தாலும் துணிச்சலாக பேசக்கூடியவர். 2026ல் எஸ்.வி.சேகரை பயன்படுத்தி கொண்டால் போதும். எஸ்.வி.சேகர் எல்லோரையும் சிரிக்கவைக்க கூடியவர். மயிலாப்பூரில் எஸ்.வி.சேகர் வசிக்கும் தெருவுக்கு அவரது தந்தை பெயர், சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக நிச்சயம் பெயர் சூட்டப்படும். நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி விட்டேன். நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” எனக் கூறினார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.வி.சேகர் மீது அன்பு கொண்டிருந்தவர் என்பதை நிறுவும் வகையில் சில நிகழ்வுகளையும் கூறினார் முதல்வர் ஸ்டாலின். “கலைஞர் எத்தனை பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து, அவர்கள் காத்திருந்தாலும், எஸ்.வி.சேகர் வந்து விட்டால், அவரிடம் தான் முதலில் பேசுவார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, எங்களது மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, எஸ்.வி.சேகர் மனுக்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்.
தெருவுக்கு எஸ்.வி.சேகர் தந்தையார் பெயர்
அதைப் பார்க்கிற போது, எங்களுக்கே கோபம் வரும். நம்ம கட்சி கோரிக்கையை கூட, இந்தளவு பார்க்க மாட்டேன் என்கிறாரே என்று. அந்தளவு கலைஞர் அவர் மீது பற்றும் பாசமும் கொண்டவர். 3,500வது நாடக விழாவில் எஸ்வி சேகர் போட்ட நாடக பெயர் 'தத்துப்பிள்ளை’ அதில் கலந்து கொண்ட கலைஞர், எஸ்.வி.சேகர் தத்துப் பிள்ளை இல்லை, தத்துவப் பிள்ளை என்றார்.” எனக் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சும், மயிலாப்பூரில் எஸ்.வி.சேகர் வசிக்கும் தெருவுக்கு அவரது தந்தையார் பெயரை சூட்டுவதாக உறுதி அளித்ததும், திமுகவினர் மத்தியிலேயே விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. ஸ்டாலின் மட்டுமல்ல, முன்பு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும் விழுந்து விழுந்து கவனித்ததை நாடறியும். ஓபிஎஸ், எஸ்.வி சேகர் வீட்டுக்கே சென்றதையும் பார்த்துள்ளோம்.
எடப்பாடி - ஆவின் பால் பாக்கெட்
தனது வீட்டில் வாங்கிய ஆவின் பால் கெட்டுப் போனதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மென்ஷன் செய்து ட்விட்டரில் பதிவிட்டார் எஸ்வி சேகர். காலையில் வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காய்ச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார், 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு புகார் செய்ததும், அவருக்கு உடனடியாக பால் பாக்கெட் மாற்றி தரப்பட்டது. எஸ்வி சேகர் பதிவு செய்த 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கே சென்று மாற்றிக் கொடுத்தார். அதனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தும் ட்வீட் போட்டார் எஸ்வி சேகர்.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் மக்களின் உயிரை காக்க வேண்டிய ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கும் நிலையில் எஸ்வி சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று கண்டனங்கள் எழுந்தன.
எஸ்.வி.சேகர் தாயார் காலில் விழுந்த ஓபிஎஸ்
எஸ்வி சேகர் 70 வயதை கடந்ததை ஒட்டி, கடந்த 2022 ஆம் ஆண்டு "பீமரத சாந்தி ஹோமம்" நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு தனிப்பட்ட முறையில் எஸ்.வி சேகரை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.
எஸ்.வி. சேகருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு பரிசு பெட்டகம் ஒன்றையும் ஓபிஎஸ் கொடுத்தார். பின்னர் எஸ்வி சேகர் தாயார் காலில் ஓ.பன்னீர்செல்வம் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். ஆக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எஸ்.வி.சேகருக்கு விழுந்து விழுந்து கவனிப்பு நடப்பது என்னவோ உண்மை.
-
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications