தாம்பரம்- சென்னை கடற்கரை ரயிலில் பயணிக்க திட்டமா.. இன்று முதல் ரத்தாமே! ஏன் என்னாச்சு?
சென்னை: தாம்பரம்- சென்னை கடற்கரை வரையிலான இரவு நேரத்தில் இயங்கும் புகர் மின்சார ரயில்கள் இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: எழும்பூர்- விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

இதனால் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு இயங்கும் புகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். அந்த வகையில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் மறுமார்க்கமாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அது போல் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் மறுமார்க்கமாக இரவு 11.35 மணிக்கு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் 2 மணி வரை அரக்கோணம் வழித்தடத்தில் செல்லும் புகர் மின்சார ரயில்கள் புட்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications