தாம்பரம் மக்களே ஜாக்கிரதை.. சென்னை புறநகரில் பெருகும் கலக்கம்.. "ஃபுல் ஸ்விங்கில்" இறங்கிய தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் பகுதி மக்கள், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், தீவிர களப்பணியில் இறங்கி உள்ளனர்.. என்ன நடந்தது?

தமிழகமெங்கும் பலத்த மழை பெய்தபடியே உள்ளன.. இன்னும் ஒரு வார காலத்துக்கு மழை இருக்கும் என்று வானிலை மையமும் அறிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்த சிக்கல் ஒன்று சென்னையிலும், சென்னையின் புறநகர்ப்பகுதியிலும் வெடித்து கிளம்பி உள்ளது.

Tambaram People and Fever increases in Chennai, Thiruvallur, Chengalpattu Districts

காய்ச்சல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறதாம்.. சளி, இருமல், காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. அதிலும் பல பேருக்கு உடல்வலியுடன் கூடிய காய்ச்சல் பெருகிவருகிறது.. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால், நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறதாம்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என இரண்டிலுமே நோயாளிகள் அட்மிட் ஆகி கொண்டிருப்பதால், நெரிசலும் அதிகமாகி உள்ளது. இதையடுத்து, சுகாதார அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருறார்கள்.

தாம்பரம்: இதில் தாம்பரத்தில்தான் அதிக எண்ணிக்கையில் காய்ச்சல் நோயாளிகள் உள்ளார்களாம்.. அதிலும், தாம்பரத்தில் மட்டும் தினமும் 2 அல்லது 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் காய்ச்சலுக்கு பலர் ஆளாகி உள்ளதால், அரசுஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளன.. நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அத்துடன், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் காணொளி காட்சி மூலமாக விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை: இதன்காரணமாக, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.. அத்துடன், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.. கொசுப்புழு வளரும் இடங்களும் அழிக்கப்பட்டு வருவதுடன், கட்டுமானப் பணிகள் நடைபெறும் நடைபெறும் இடத்தில் கொசு உற்பத்தி அதிகமாக இருந்ததால், உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெரும் பீதி: சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான், மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட புறநகர்ப்பகுதி மக்களுக்கு பீதி கிளம்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+