அமலாக்கத்துறை பெரிய முடிவு.. ஜாபர் சாதிக்கின் சகோதரரும் அதிரடியாக கைது.. இன்று வரும் முக்கிய வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது சகோதரரான முகமது சலீமும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். தொடர்ந்து அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

Tamil film producer Zafar Sadiq s brother was also arrested and Today s important case

போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடந்ததாக புகார் எழுந்ததன் காரணமாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கைது செய்தது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆகஸ்ட் 13ம் தேதி (நேற்று) ஆஜரானார். நீண்ட விசாரணைக்குப் பிறகு முகமது சலீமை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கைதான சலீமை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிடுகையில், "போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தில் போலி நிறுவனங்கள் தொடங்கி உள்ளார். அதில் முதலீடு செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்

முகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண், "மனுதாரர் விசாரணைக்கு ஆஜாராகி முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இந்நிலையில், அவரை கைது செய்தது தேவையற்றது," என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடைமேய முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவுக்கு முகமது சலீம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (ஆக.14) தள்ளிவைத்துள்ளார். இதன்படி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம்அனுமதி தருமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+