நிதிச்சுமையை குறைக்க.. அமைச்சர்களுக்கு தரப்படும் சலுகைகளை பறியுங்கள்! தமிழ் மாநில காங்கிரஸ் யோசனை!
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பதில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை திரும்பப்பெற்றுக் கொண்டால் அரசுக்கு நிதிச்சுமை பெருமளவில் குறையும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் அரசு என்பதற்கு இது போன்ற கட்டண உயர்வு தான் அர்த்தமா என வினவப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

செந்தில்பாலாஜி
தமிழ்நாட்டில் பயன்படுத்தும் யூனிட்டுகள் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (18.07.2022) அறிவித்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்த உள்ளதாகவும், வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சாரத் துறையில் கடன் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்ததாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம்
"தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம், மேலும், 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் எனவும், ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

விடியா அரசின்
தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் அறிவிப்புகள் என்பது நாளுக்கு நாள் மக்களுடைய அதிருப்தியையும் மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கக்கூடிய அறிவிப்புகளாகவே இருக்கிறது. மின்சாரத் துறையின் சார்பில் ஏற்கனவே மின்தடை என்பது அறிவிக்கப்படாத ஒன்றாக தொடர்கதையாகி வருகிறது. இதிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய ஒரு போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. மின்சாரத் துறை அமைச்சரிடம் இது பற்றி காரணம் கேட்டால் அனில் போய் வந்து கொண்டிருக்கிறது இதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று ஒரு காரணத்தை கூறினார்.

நிலக்கரி தட்டுப்பாடு
அதன் பிறகு தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார். ஆனால் ஆளும் மத்திய அரசு போதிய நிலக்கரியை தமிழகத்திற்கு கொடுத்து விட்டதாக கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு குளறுபடியான நிர்வாகத்தை மின்சாரத்துறை நிர்வகித்துக் கொண்டுள்ளது. இந்த மின் கட்டண மாற்றம் என்பது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது இவர்கள் பல்வேறு காரணங்களை காட்டினாலும் கூட அவை அனைத்தும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

அடியோடு பாதிக்கும்
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வோம் என்று கூறுவதன் அர்த்தமா? ஏற்கனவே அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து உள்ள சூழ்நிலையில் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும்.
Recommended Video

அமைச்சர்களுக்கு சலுகை
முதல்வர் அவர்களே, ஏன் நீங்கள் இப்படி செய்து பாருங்கள், அரசு செலவில் அமைச்சர்களுக்கு கார் வேண்டாம், கிரீன்வேஸ் ரோடு பங்களா வேண்டாம் இன்னும் கொடுக்கப்படும் எண்ணிலடங்கா சலுகைகளை பறித்து மக்களை விலையேற்றத்தில் இருந்து காக்க வழி வகை தேடுங்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
-
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications