தமிழக வேளாண் பட்ஜெட் 2021 LIVE: நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு பயிர்களின் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' தொடங்கப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையில் தொழில் முனைவோரை ஈர்க்க தொழில் முனைப்பு மையம்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கொளத்தூரில் நவீன விற்பனை மையம்
இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
பசுந்தீவன வங்கிகளை ஏற்படுத்த நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணைக்கு ரூ. 27.12 கோடி ஒதுக்கீடு
தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்குகள்
திருவள்ளூரில் கீரை, மிளகாய் கிடங்கு அமைப்பு
பண்ருட்டியில் முந்திரி, பலா, கிடங்கு அமைப்பு
நாமக்கல்லில் மிளகு, வெங்காய கிடங்கு அமைக்கப்படும்
7 மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிப்பு
தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், தூத்துக்குடி, மதுரை, திருப்பூரில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்
கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைப்பு
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2,750ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிப்பு
இதன் மூலம் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள்
கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளின் வங்கிகளில் ஊக்கத்தொகை செலுத்தப்படும்
நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது
சாதாரண ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ 50ல் ரூ 75 ஆக அதிகரிப்பு
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ 2015க்கு கொள்முதல் செய்யப்படும்
சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ஊக்கத் தொகை 70ல் இருந்து 100 ஆக உயர்வு
நெல் குவிண்டால் சன்ன ரகம் ரூ. 2060 க்கு கொள்முதல் செய்யப்படும்
தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது
வேளாண் வணிகர்களையும் கருத்துக்கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது
வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம்
மனித நாகரீகம் பன் மடங்கு வளர்ந்தாலும் உணவின்றி உயிர்வாழ இயலாது
READ MORE












Click it and Unblock the Notifications