நம்பர் 1 நாமதான்.. கேரளா, மகாராஷ்டிரா கூட கிட்ட வர முடியல.. தரமான சாதனை படைத்த தமிழ்நாடு!
சென்னை: நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை தயாரித்து, மாநில அரசு வெளியிட்ட மாநில குறியீட்டு கட்டமைப்பு (SIF) 2.0ல் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
244 தேசிய, உலகளாவிய அளவுகோள்கள் அடிப்படையில் மூலம் இந்த வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், SIF 2.0 முன்னுரையில், திராவிட வளர்ச்சி மாடலின் சமூக நீதி, சமத்துவம், உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். "ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு குடிமகனையும்" வளர்ச்சி சென்றடைய, விளைவு சார்ந்த திட்டமிடல் மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு வளர்ச்சியில் சாதனை
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 13 ஆகக் குறைந்து, தமிழ்நாடு நாட்டிலேயே சிறந்த செயல்பாடு கொண்டுள்ளது. 99.98% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. ஆயுட்காலம் 73.2 ஆண்டுகளாக உயர்ந்து, தேசிய அளவில் முதல் மூன்று மாநிலங்களில் இடம்பிடித்துள்ளது.
கல்விக் குறியீடுகளில், 18-23 வயதினரின் 47% உயர்கல்வி சேர்க்கை விகிதத்துடன் (GER) தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம். பாலின சமத்துவக் குறியீடு 1.01 ஆக உயர்ந்து, பெண்களுக்குச் சம வாய்ப்பை வழங்குகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் மின்சாரம், குடிநீர் உள்ளதுடன், 99.9% இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றவர்கள்.
81.87% கிராமப்புறக் குடும்பங்கள் வீட்டிலேயே குழாய் மூலம் குடிநீர் பெறுகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தால் அனைத்து மாவட்டங்களும் திறந்தவெளி மலம் கழித்தல் அற்றதாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தனது மின் தேவையில் 50%-க்கும் அதிகமானதை காற்றாலை, சூரிய, நீர்மின்சக்தி மூலம் உற்பத்தி செய்கிறது.
வேலையின்மை விகிதம் 7.2% இலிருந்து 4.8% ஆகக் குறைந்துள்ளது, இது மேம்பட்ட தொழிலாளர் சந்தையைக் குறிக்கிறது. காலநிலை நடவடிக்கை, பேரிடர் மேலாண்மை, கடலோர மறுசீரமைப்பு போன்றவற்றில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
இன்னொரு பக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புள்ளிவிவரப்படி, 2020 முதல் 2025 நிதியாண்டு வரையிலான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அடிப்படையில் வேகமாக வளரும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மொத்த லிஸ்டில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான அசாம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிட்ட சில மாநிலங்களை மட்டும் சார்ந்திருக்காமல், பல மாநிலங்களின் வலுவான பங்களிப்பால் வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புள்ளிவிவரப்படி, 2020 முதல் 2025 நிதியாண்டு வரையிலான பணவீக்கச் சரிசெய்யப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கணிசமான உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வளர்ச்சி
இந்த மாநில அளவிலான வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரப் போக்கிற்கு இணையாக உள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 நிதியாண்டில் ₹145.35 லட்சம் கோடியிலிருந்து 2025 நிதியாண்டில் ₹187.97 லட்சம் கோடியாக உயர்ந்து, ஐந்தாண்டுகளில் 29% வளர்ச்சியைப் பதிவு செய்தது. வேகமாக வளர்ந்த முதல் 10 மாநிலங்களின் பொருளாதாரம், தேசிய சராசரியை விஞ்சி 45% வரை விரிவாக்கத்தைக் கண்டுள்ளன.
அசாம் 45% வளர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. இதன் GSDP ₹2.4 லட்சம் கோடியிலிருந்து ₹3.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. விவசாயம், எண்ணெய்-எரிவாயு, வடகிழக்கு உள்கட்டமைப்பு முதலீடுகள் அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள்.
தமிழ்நாடு 39% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றது, GSDP ₹12.4 லட்சம் கோடியிலிருந்து ₹17.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. வாகனங்கள், மின்னணுவியல், ஜவுளி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இதன் வளர்ச்சியில் பங்கு வகித்தன.
அடுத்தடுத்த இடங்களில் உள்ள மாநிலங்களில்
கர்நாடகா 36% வளர்ச்சியுடன் ₹11.5 லட்சம் கோடியிலிருந்து ₹15.7 லட்சம் கோடியாக GSDPயை உயர்த்தியது (தொழில்நுட்ப சேவைகள், புத்தொழில்கள்). உத்தரப் பிரதேசம் 35% வளர்ச்சியைப் பதிவு செய்து, GSDP ₹11.7 லட்சம் கோடியிலிருந்து ₹15.8 லட்சம் கோடியாக உயர்ந்தது (பெரிய உள்நாட்டு சந்தை, விவசாயம், தளவாடக் கட்டமைப்பு).
ராஜஸ்தான் 34% வளர்ச்சியுடன் ₹6.8 லட்சத்திலிருந்து ₹9.1 லட்சம் கோடியாகப் பொருளாதாரம் விரிவடைந்தது. சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் சிமென்ட் உற்பத்தி அதன் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள்.
பின்தங்கிய மற்ற மாநிலங்கள்
பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் இரண்டும் 33% வளர்ச்சி கண்டன. பீகார் GSDP ₹4.0 லட்சம் கோடியிலிருந்து ₹5.3 லட்சம் கோடியாக வளர்ந்தது (விவசாயம், சேவைகள் உந்துதல்). ஆந்திரப் பிரதேசம் GSDP ₹6.5 லட்சம் கோடியிலிருந்து ₹8.7 லட்சம் கோடியாக விரிவடைந்தது (விவசாயம், துறைமுகங்கள், தளவாடங்கள், உணவு பதப்படுத்துதல்).
சத்தீஸ்கர், ஜார்கண்ட் தலா 31% வளர்ச்சியைப் பதிவு செய்தன. சத்தீஸ்கரின் GSDP ₹2.5 லட்சத்திலிருந்து ₹3.3 லட்சம் கோடியாக உயர்ந்தது (சுரங்கம், மின் உற்பத்தி, எஃகு). ஜார்கண்டின் பொருளாதாரம் ₹2.3 லட்சத்திலிருந்து ₹3.0 லட்சம் கோடியாக அதிகரித்தது (கனிமங்கள், கனரகத் தொழில்கள்).
தெலங்கானா 30% வளர்ச்சியுடன் முதல் பத்து மாநிலங்களின் பட்டியலை நிறைவு செய்தது. அதன் GSDP ₹6.4 லட்சம் கோடியிலிருந்து ₹8.4 லட்சம் கோடியாக உயர்ந்தது. தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் நகர்ப்புற சேவைகள் அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.
-
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications