Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது லிஸ்ட்லயே இல்லையே! கொடநாடு வழக்கிற்குள் வரும் இன்டர்போல்! ’சில்வண்டு’ சிக்குமா? முதல்வர் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதனை இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக கூறியுள்ளார். இதன் காரணமாக வழக்கின் 'முக்கிய' குற்றவாளி" குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமென கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது.

tamil nadu assembly session 2024 Kodanad Interpol

இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கோடநாடு சம்பவம்: குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கொடநாடு மேலாளர் நடராஜ், சசிகலா, சசிகலாவின் உறவினர் விவேக், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்றது. அதேபோல் அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக இருந்த சஜூவனிடமும் பல முறை விசாரணை நடைபெற்றது.

5 ஆண்டுகளாக இவ்வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூன் 21ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் ஜித்தின் ஜாய் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜர் ஆகினர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு கொலை நடந்த ஓரிரு நாட்களில் கனகராஜின் செல்போனிற்கு வெளிநாட்டு செல்போண் எண்ணில் இருந்து ஐந்து முறை அழைப்பு வந்துள்ளது. யார் அவரை அழைத்தார்கள், எதற்காக அவரை அழைத்தார்கள் என்பது குறித்து இன்டர்போல் போலீஸாரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அத்துடன் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, கொலை நடந்த இடத்தில் ஆய்வு நடத்துவது சரியாக இருக்காது" எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இண்டர்போல் உதவியை நாடியுள்ளதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மானியக் கோரிக்கைகள் தொடர்பான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின், கடைசி நாள் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது காவல்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், தேர்தல் வெற்றி, கள்ளக்குறிச்சி சாராய பலி விவகாரம், காவல்துறையினருக்கான திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அப்போது கொடநாடு வழக்கு குறித்து பேசிய அவர்," கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொடநாடு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதா என விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம்" என கூறினார். இதன் மூலம் இவ்வழக்கில் மேலும் சிலர் விசாரிக்கப்படலாம் எனவும், முக்கிய குற்றவாளி யார் என்பது குறித்து விரைவில் தெரியும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+