ஒரே போடு.. கண்டிப்பாக ஆக்சன் எடுப்பேன்.. கறாராக சொன்ன ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள்
சென்னை: உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி கழிவு நீரகற்றும் பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தும் உரிமையாளர் / ஒப்பந்ததாரர் / பணி அமர்த்துபவர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 22.05.2023 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம், 2013 மற்றும் தமிழ்நாடு மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகள், 2022 ஆகிய விதிகளின்படி, உயிரிழப்பு மற்றும் விபத்தில்லா தூய்மைப் பணிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாறுவதை உறுதி செய்யும் முக்கிய நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை" 09.12.2022 அன்று தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில், முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6, மதுரை மாநகராட்சி மண்டலம்-3, புதுக்கோட்டை, பொள்ளாச்சி நகராட்சிகள் மற்றும் சேரன்மாதேவி பேரூராட்சி பகுதிகளில் இத்திட்டத்தில் பயன் பெறும் வகையில் தூய்மைப் பணியாளர் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதில் 2198 தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் 28.2.2023 அன்று தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கம் (DICCI) அமைப்புடன் இணைந்து சென்னைக் குடிநீர் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தொழில் நுட்ப உபகரணங்களைக் கொண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தால் ஒப்பந்தப்புள்ளிகள் ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
21.2023 நாளிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண்.1-ன்படி, கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் அரசின் உரிமம் பெற்றப் பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கழிவுநீர் அகற்று லாரிகளும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெறவேண்டுமென தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் இதுவரை 313 லாரிகளும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் 1070 உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கழிவு நீரகற்றும் வாகன உரிமையாளர்கள் / ஓட்டுநர்கள் / உதவியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக கழிவு நீரகற்றும் பணிகளை இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பயிற்சிகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் மறைமலைநகர் ஆகிய இடங்களில் இதுவரை 3064 லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17.05.2023 மற்றும் 26.05.2023 ஆகிய இரு தினங்களிலும் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் மற்றும் சாலை போக்குவரத்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. லாரி உரிமத்தில் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக உரிமம் பெறாமல் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்றினால் முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000/- அபராதமும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000/- அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி செயல்பட்ட 16 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து கழிவு நீரகற்றும் லாரிகளிலும் GPS கருவிகள் பொருத்தப்பட்டு லாரிகளின் அலுவலகத்தில் அறையிலும் இயக்கங்கள் சென்னை செயல்பட்டுவரும் மற்றும் குடிநீர் வாரியத்தின் தலைமை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அந்தந்த நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 19.6.2023 முதல் பெருநகர சென்னை மாநகரப் பகுதிகளிலும், 30.6.2023 முதல் பிற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உரிமம் பெற்ற கழிவு நீர் வாகனங்களுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி பதிவு செய்யும் முறை மூலம் இதுவரை 838 கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண்.183, நாள் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 31.12.2022 மூலம் வழிகாட்டு மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன்படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் இடையே, விழப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் 17.06.2023 அன்று அனைத்து தமிழ் / ஆங்கில நாளிதழ்களில் தமிழ்நாடு முழுவதும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மொத்தம் 770 இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகள் 2022-ன்படி சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.64 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கழிவு நீரகற்றும் சேவைகளைப் பெறுவதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் செயலி (App) உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நவீன பகுதி தானியங்கி கழிவுநீர் தடை அகற்றி இயந்திரம் (Sewer Croc) மூலம் கழிவுநீர் பிரதான குழாய்களில், கழிவுநீர் செல்ல தடையாக இருக்கும் கசடுகள். மரவேர்கள் மற்றும் கழிவு அடைப்புகளை நவீன முறையில் நீக்குவதற்கு 8 எண்ணிக்கையிலான நவீன பகுதி தானியங்கி கழிவுநீர் தடை அகற்றும் இயந்திரம் தற்பொழுது கொள்முதல் செய்வதற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைக்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி கழிவு நீரகற்றும் பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தும் உரிமையாளர் / ஒப்பந்ததாரர் / பணி அமர்த்துபவர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீர் அமைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளை முற்றிலுமாக இயந்திரங்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications